த்த் தெறிக்க.. பிசிறு தட்டும் பிக்சல்.. வெயிட்டிங் ஃபீவரை கிளப்பிய கூகுள்.. அக்.4இல் மிரட்ட வரும் மாடல்!
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரண்டுபோகும் விதமாக கூகுள் பிக்சல் 8 சீரிஸ் (Google Pixel 8 Series) மாடல்களின் டீசர் காட்டுத்தீ போல உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. அந்த போன்கள் எப்போது வெளியாகும்? அவற்றின் அம்சங்கள் என்ன? உள்ளிட்ட முழு விவரம் இதோ.
ஆப்பிள் போன்களுக்கு நிகரான இடத்தை பிடிக்க சாம்சங் நிறுவனம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இருப்பினும், 2ஆவது இடத்திலேயே இருக்கிறது. இதற்கு அடுத்தபடியான இடத்தை பிடிக்க பல நிறுவனங்களிடையே போட்டிகள் நிலவிவருகின்றன. ஆனால், 2016ஆம் ஆண்டில் பிக்சல் (Pixel) மாடல்களுடன் வந்த கூகுள் (Google) எளிதாக அந்த இடத்தை பிடித்துவிட்டது.

இப்போது, அந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்துவிடும் போலிருக்கிறது. அந்த வரிசையில், ஆப்பிள் 15 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களுக்கு விஸ்வரூப வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த ஃபீவரை மேலும் தூண்டிவிடும் விதமாக கூகுள் நிறுவனம், அந்த போன்களின் டீசரை, பிக்சல் வாட்ச் உடன் வெளியிட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கொண்டிருக்கிறது. டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது. 6.17 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே வருகிறது.
இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார் கொண்ட கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சார் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. அதே போல 10.8 எம்பி செல்பீ கேமராவானது, சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் கொண்டிருக்கிறது. இந்த கேமராக்களில் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.
இந்த கூகுள் பிக்சல் மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் கொண்டுள்ளது.இந்த போனில் 12W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,485mAh பேட்டரி வருகிறது. பிளாக் (Black), யெல்லோ (Yellow), லைட் ப்ளூ (Light Blue) ஆகிய 3 கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 8 போனின் ஆரம்ப விலை ரூ.75,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த மாடல் 6.7 இன்ச் க்யூஎச்டிபிளஸ் (QHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 டிஸ்பிளே பாதுகாப்பு வருகிறது.
இந்த போனும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமரா டிரிபிள் ரியர் சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் ஜிஎன்2 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்787 சென்சார் கொண்ட 64 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 48 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. அதேபோல 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மாடல் 12ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,950mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் பிக்சல் ப்ரோ மாடல் வைட் (White), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.1,10,000 பட்ஜெட்டில் இருக்கலாம்.
கூகுள் பிக்சல் வாட்ச் 2 அம்சங்கள் (Google Pixel Watch 2 Specifications): இந்த வாட்ச் 1.2 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. அதோடு வியர் ஓஎஸ் 4 (Wear OS 4) சப்போர்ட் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 ஜென் 1 (Qualcomm Snapdragon W5 Gen 1) சிப்செட் கொண்டுள்ளது.
5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், மல்டிபர்பஸ் எலக்ட்ரிகல் சென்சார் மற்றும் பிளட் ஆக்ஸிஜன் சென்சார் போன்ப ஹெல்த் மானிட்டர் அம்சங்கள் வருகின்றன. எல்இடி (LTE) மற்றும் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
306mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த மூன்று ப்ராடக்ட்களும் அக்டோபர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் நியூ யார்க் சிட்டியில் அறிமுக நிகழ்வு நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நிகழ்வு தொடங்கும். அதன்பின் அதிகாரப்பூர்வமாக விலை மற்றும் அம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications