Home
Mobile

தம்பி Flipkart நீ என்ன ஆஃபர் தர்றது? Pixel 7, Pixel 7 Pro மீது முழுசா ரூ.15000 விலைக்குறைப்பு; Google அதிரடி!

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனைக்கு (Flipkart Big Saving Days Sale) முன்னதாக கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 7 (Pixel 7) மற்றும் பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro) மீது ரூ.15,000 வரையிலான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

கூகுளின் இந்த அதிரடி விலைக்குறைப்பு பெரியதா? அல்லது பிக் சேவிங் டேஸ் வழியாக இதே இரண்டு பிக்சல் போன்கள் மீது பிளிப்கார்ட் கொடுக்கும் சலுகைகள் பெரியதா? பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவின் புதிய விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன? இதோ விவரங்கள்:

Pixel 7, Pixel 7 Pro மீது முழுதாக ரூ.15,000 விலைக்குறைப்பு!

சமீபத்திய விலைக்குறைப்பிற்கு பின்னர் கூகுள் பிக்சல் 7 போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.49,999 ஆக குறைந்துள்ளது. மறுகையில் உள்ள பிக்சல் 7 ப்ரோ மாடலின் விலை ரூ.69,999 ஆக குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த 2 போன்களின் அசல் விலை முறையே ரூ.59,999 மற்றும் ரூ.84,999 ஆகும்.

இருப்பினும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது இந்த 2 பிக்சல் போன்களையும் இன்னும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதாவது பிக்சல் 7 மாடலை ரூ.44,999 க்கும், பிக்சல் 7 ப்ரோ மாடலை ரூ.65,999 க்கும் வாங்க முடியும். அதாவது கூகுளின் விலைக்குறைப்பை விட பிளிப்கார்ட்டின் சலுகை தான் பெரியது!

பிளிப்கார்ட் வழங்கும் இந்த இறுதி சலுகை விலையை (Final Offer Price) பெற நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer) மற்றும் பேங்க் கார்டு ஆஃபர் (Bank Card Offer) உள்ளிட்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொறுத்தவரை, பிக்சல் 7 ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது; மறுகையில் உள்ள ப்ரோ மாடலானது சற்றே பெரிய 6.7-இன்ச் குவாட்-எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

மேலும் இந்த இரண்டு பிக்சல் போன்களும் கூகுளின் ஆக்டாகோர் டென்சர் ஜி2 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, பிக்சல் 7 போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளன.

மறுகையில் உள்ள பிக்சல் 7 ப்ரோவில் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 30x சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மேலும் இந்த 2 போன்களிலும் 10.8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டுமே வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Wireless Charging Support) உடனான 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. கூகுளின் கூற்றுப்படி, எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ஐ பயன்படுத்தினால் இந்த பிக்சல் போன்கள் 72 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Reduced Prices of Pixel 7 Pixel 7 Pro But Its Not Better Than Flipkart Big Saving Days Sale Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X