கூகுள் பிக்சல் எக்ஸ்எல் 2 சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியானது.!
கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 2560 x 1312 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.6 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதுவரை கிடைத்த தகவலின் கீழ் கூகுள் நிறுவனம் அதன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 கருவிகளை இந்த ஆண்டுக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வண்ணம் கூகுள் நிறுவனத்தின் கருவிகளில் ஒன்று ஜிஎப்எக்ஸ்பெஞ்சில் தோன்றியுள்ளது. ரோலண்ட் குவாண்ட்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் லீக்ஸை முதலில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மேலும் இவைகள் கூகிள் பிக்சல் எக்ஸ்எல் 2 என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருபக்கம் சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்படும் கூகுள் ஸ்மார்ட்போன் சோதனை விரைவில் கருவி வெளியாகும் என்பதை அறிவிக்க மறுபக்கம் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 2560 x 1312 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.6 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஸ்மார்ட்போன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்குகிறது. மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்டு இயங்குவது போல் தெரிகிறது.

மேலும் இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 10ஜிபி அளவிலான உள் சேமிப்பு நினைவகம் கொண்டுள்ளது. இதன் இறுதி மாறுபாடு 128ஜிபி வரை மெமரி கொண்டிருக்கலாம். கேமராக்கள் பற்றி பேசுகையில், இந்த கைபேசி 12எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. பிக்சல் எக்ஸ்எல் 2 சாதனமானது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.
தவிர, முன்பு கூறியது போல், கூகுள் இப்போது இந்த தொலைபேசி சார்ந்த சோதனை பணிகளில் உள்ளது மற்றும் இறுதி சாதனம் அறிவிக்கப்படும் போது குறிப்புகள் வேறாக இருக்கவும் வாய்ப்புண்டு. சமீபத்தில் வெளியான தகவலொன்று ஆண்ட்ராய்டு ஓ கொண்டு பிக்சல் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளதாக கூறியது,
எனவே பிக்சல் ஸ்மார்ட்போனின் அடுத்த மறுதொடக்கம் நௌவ்கட் இயங்குதளத்திற்கு பதிலாக ஆண்ட்ராய்டு ஓ உடன் வரக்கூடும். எவ்வாறாயினும், அடுத்த பிக்சல் சாதனங்களுடன் சில மேம்பாடுகளை கூகுள் நிறுவனத்திடம் எதிர்பார்க்கலாம். பெரும்பாலும், கேமரா மேம்படுத்தப்பட்ட மற்றும் வரவிருக்கும் பிக்சல் தொலைபேசிகள் உலோக மற்றும் கண்ணாடி பேனல்கள் கொண்டு வெளிவரலாம்.


Click it and Unblock the Notifications