கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7 : எது சிறந்தது?

சமீபத்தில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பிக்ஸல் போன் மற்றும் ஐபோன் 7 கருவிகளில் எந்தக் கருவி சிறந்தது என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

By Meganathan
|

கூகுள் நிறுவனம் தனது நெக்சஸ் போன்களை அழித்து இதற்குப் பதிலாக களத்தில் இறக்கியிருக்கும் புதிய வகை ஸ்மார்ட்போன் தான் கூகுள் பிக்ஸல் போன் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகளுக்கு போட்டியளிக்கும் விதமாகக் களத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பிக்ஸல் போன்கள் பலரிடம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வழக்கமான ஆப்பிள் போட்டியாளராக கருதப்படும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட் 7 கருவியின் கோளாறு காரணமாகப் பின்தங்கியிருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 7 போட்டியாளராகக் கூகுள் பிக்ஸல் போன்கள் பார்க்கப்பட்டு வருகின்றது. உலகெங்கும் கூகுள் பிக்ஸல் மற்றும் ஐபோன் 7 கருவிகளிடையே ஒப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

ஐபோன் 7 அல்லது கூகுள் பிக்ஸல் போன் - இவற்றில் எது சிறந்த கருவி என்பதைப் பார்ப்போமா..?

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: வடிவமைப்பு

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: வடிவமைப்பு

ஆப்பிளின் புதிய ஐபோன் கருவியானது புதிய கருப்பு நிறம் மற்றும் மெட்டல் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதுவே பிக்ஸல் போன்களை எடுத்துக் கொண்டால் இதில் கிளாஸ்ஸி மேற்புறம் மற்றும் கீழ் புறம் மெட்டல் ஃபினிஷ் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு நிறங்களிலும் பிக்ஸல் கருவிகள் கிடைக்கின்றது.

ஐபோன் 7 கருவியைப் பொருத்த வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன் பெற்றுள்ளது. இதனால் கருவியினை நீரில் நனைத்தாலும் எதுவும் ஆகாது. பிக்ஸல் போன்களில் இதுபோன்ற ரெசிஸ்டண்ட் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: டிஸ்ப்ளே

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: டிஸ்ப்ளே

கூகுள் பிக்ஸல் போன் 5 இன்ச் திரை கொண்டுள்ளது, ஐபோன் 7 கருவியானது 4.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. எனினும் பிக்ஸல் போன்களின் பேனல் ஷார்ப் மற்றும் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஐபோன் 7 கருவியுடன் ஒப்பிடும் போது இரு கருவிகளும் அதிகப்படியான மாற்றங்களை வெளிப்படுத்தவில்லை.

பிக்ஸல் போன்களும் அதிக துல்லியமான நிறங்களை பிரதிபலிக்கின்பறது, என்றாலும் ஐபோன் 7 கருவியானது அதிக உண்மையான புகைப்படங்களை பிரதிபலிக்கின்றது. எனினும் இது ஒவ்வொருவரின் தேர்வைப் பொறுத்தது ஆகும்.

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: மீடியா

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: மீடியா

ஐபோன் 7 கருவியில் 3டி டச் ஸ்கிரீன் சார்ந்த பிரெஷர் சென்சிட்டிவ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சற்றே அழுத்தம் கொடுக்கும் போது பல ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: ஹெட்போன் ஜாக்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: ஹெட்போன் ஜாக்

ஐபோன் 7 கருவியில் மற்ற கருவிகளைப் போன்று ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை, இதன் காரணமாக நீங்கள் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன்களை தனியே வாங்க நேரிடும். பிக்ஸல் போன்களில் வழக்கமான 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களுக்கு தனி செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: மெமரி

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: மெமரி

இங்கு இரண்டு கருவிகளிலும் மெமரி கார்டு ஸ்லாட் கொண்டிருக்கவில்லை, இதனால் இவற்றில் நீங்கள் மெமரியை நீட்டிப்பது குறித்து கற்பனையும் செய்ய முடியாது. கூகுள் பிக்ஸல் போனின் மெமரியைப் பொருத்த வரை 32 ஜிபி அல்லது 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 கருவியில் 32 ஜிபி, 1218 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. உங்களிடம் அதிக பட்ஜெட் மற்றும் கூடுதல் மெமரி வேண்டுமெனில் இந்த கருவியினை தேர்வு செய்யலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: இயங்குதளம்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: இயங்குதளம்

கூகுள் பிக்ஸல் போனுடன் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படுகின்றது. இதில் எண்ணற்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சமும் அடங்கும். இத்துடன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சமும் அடக்கம்.

ஆப்பிளின் ஐஓஎஸ் 10 இயங்குதளமும் பல்வேறு பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன் பார் போன்று இதன் கண்ட்ரோல் சென்ட்டர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் லாக் ஸ்கிரீன் பல்வேறு ஷார்ட்கட் மற்றும் பயனுள்ள விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: கைரேகை ஸ்கேனர்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: கைரேகை ஸ்கேனர்

ஐபோன் 7 மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களும் அதிசிறந்த கைரேகை ஸ்கேனர்களை கொண்டுள்ளன. ஐபோன் 7 கருவியில் கைரேகை ஸ்கேனரானது ஹோம் பட்டனினுள் வைக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் போனில் கைரேகை ஸ்கேனர் ஆனது கருவியின் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது. கருவியைக் கையில் எடுக்கும் போது விரல் நுனி சரியாக கைரேகை ஸ்கேனரில் படும் படி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதனைப் பயன்படுத்துவது எளிமையான ஒன்றாகவே இருக்கின்றது.

இரு கருவிகளிலும் கைரேகை ஸ்கேனர் சமமான வேகம் மற்றும் இயக்கங்களைக் கொண்டுள்ளது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: இயக்கம்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: இயக்கம்

கூகுள் பிக்ஸல் போன்களில் புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 7 கருவியிலும் புத்தம் புதிய சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இந்தக் கருவியில் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய கேம்கள் இந்த சிப்செட்டில் சீராக இயங்குகின்றதோடு அதிக துல்லியமான காட்சிகளையும் பிரதிபலிக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: பேட்டரி பேக்கப்

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: பேட்டரி பேக்கப்

ஐபோன் 7 கருவியானது ஒரு முறை சார்ஜ் செய்து சீரான பயன்பாடுகளுக்குப் பின் 36 மணி நேரம் அதாவது ஒன்னரை நாள் பேக்கப் வழங்குகின்றது. கூகுள் பிக்ஸல் போனினை பொருத்த வரை ஒரு முறை சார்ஜ் செய்து சீரான பயன்பாட்டிற்கு பின் கிட்டத்தட்ட ஒரு நாள் வரை பேக்கப் வழங்குகின்றது.

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: கேமரா

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7: கேமரா

பிக்ஸல் மற்றும் ஐபோன் 7 கருவிகளில் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிக்ஸல் போனில் வழங்கப்பட்டுள்ள HDR+ மோட் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்குகின்றது. மேலும் குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படம் நன்கு பிரதிபலிக்கப்படுகின்றது.

எனினும் ஐபோன் 7 கருவியும் எவ்வித வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படங்களைப் பிரதிபலிக்கின்றது. இந்த இரு கருவிகளும் அதிகபட்சம் 4K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும், இதில் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால், புகைப்படம் எடுக்கும் போது ஏற்படும் அசைவுகளால் புகைப்படம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google Pixel phone vs iPhone 7: Which is best one

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X