Home
Mobile

என்னது? 8-இன்ச் டிஸ்பிளே-ஆ! சோதிக்காதீங்க டா.. Google-ஐ புலம்ப விட்ட சீன கம்பெனி.. OnePlus-க்கும் கச்சேரி!

"அடேய் சோதிக்காதீங்க டா என்னய.. சோதிக்காதீங்க" என்பது தான் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (Google CEO) சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) சமீபத்திய மைண்ட் வாய்ஸ்களில் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் சீன நிறுவனமான ஷாவ்மீ (Xiaomi) பார்த்த வேலை அப்படி!

ஷாவ்மீ நிறுவனம் அப்படி என்ன செய்து விட்டது? என்று கேட்டால்.. இன்னும் செய்யவில்லை. இனிமேல் தான் செய்ய போகிறது. வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று ஷாவ்மீ நிறுவனம் தனது புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3 (Xiaomi Mix Fold 3) மாடலாகும்.

சோதிக்காதீங்க டா.. Google-ஐ புலம்ப விட்ட சீன கம்பெனி!

ஷாவ்மீயின் இந்த நெக்ஸ்ட் ஜென் ஃபோல்டிங் ஸ்மார்ட்போன் (Next Gen Folding Smartphone) ஆனது கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) போனிற்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகேம வேண்டாம். ஏனென்றால், எப்படி பார்த்தாலும் ஷாவ்மீயின் விலை நிர்ணயம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாக இருக்கும்.

ஏற்கனவே கூகுளுக்கு போட்டியாக, ஒன்பிளஸ் நிறுவனமும் கூட தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) மாடலை, இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலைப்பாட்டில் ஷாவ்மீ நிறுவனமும் தன் பங்கிற்கு ஒரு புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது கூகுளுக்கு மேலுமொரு தலைவலியாக இருக்கலாம் .

ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானது கூகுள் பிக்சல் ஃபோல்ட்டிற்கு மட்டுமின்றி ஒன்பிளஸ் ஓப்பனுக்கும் கூட சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த பஞ்சாயத்தில் சாம்சங்கின் லேட்டஸ்ட் ஃபோல்ட் மாடலான கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) சிக்குமா என்று கேட்டால்.. சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாக அதுவும் சிக்கும்!

நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.1,54,000 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வராத பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.147,490 க்கு வாங்க கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, இன்னும் அறிமுகமாகாத ஒன்பிளஸ் ஓப்பனின் விலை ரூ1.4 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் (India Launch) செய்யப்படுமா என்பது தான் இங்கே இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. முந்தைய ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் போன்களை இதுவும் கூட சீனாவில் மட்டுமே (China Only) அறிமுகம் செய்யப்படலாம்.

இல்லையென்றால் ஃபோல்டபிள் போன்களின் மீது இந்தியர்கள் காட்டும் வரவேற்பை மனதிகொற்ண்டு, இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய விற்பனையின் போது, வெறும் 28 மணி நேரத்தில் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 போன்கள் மீது 1 லட்சம் ஆர்டர்கள் குவிந்தன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் பழைய ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 2 போலல்லாமல், இது குவாட் ரியர் கேமரா செட்டப்பை (Quad Rear Camera Setup) பேக் செய்யும். அவைகள் லைக்காவால் (Leica) ட்யூன் செய்யப்பட்ட சென்சார்களாக இருக்கும் மற்றும் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டிருக்கும்.

இதன் கேமரா செட்டப்பில் பெரிஸ்கோப் (Periscope) கேமரா, 1-இன்ச் வைட் ஆங்கிள் (Wide Angle) கேமரா, அல்ட்ரா-வைட் (Ultra Wide) கேமரா மற்றும் டெலிஃபோட்டோ (Telephoto) கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 8.02-இன்ச் மடிக்கக்கூடிய அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவுடன் இடம்பெறும் என்பதை ஷாவ்மீ வெளிப்படுத்தியுள்ளது.

இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்களும் இடம்பெறும். இது 8 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்குமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மிக்ஸ் ஃபோல்ட் உடன் ஓப்பிடும்போது 52 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும் சரியான பேட்டரி திறனை (Battery Capacity) ஷாவ்மீ வெளிப்படுத்தவில்லை. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன் ஆனது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான (Wireless Charging) ஆதரவுகளை கொண்ட 4,800எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Fold Samsung Galaxy Z Fold 5 OnePlus Open Rival Xiaomi Mix Fold 3 Launch on August 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X