அசூர விற்பனை.. ரூ.12,000 விலை குறைப்பு.. 7 OS அப்டேட்.. 48MP சோனி கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இப்போது, முந்தைய மாடலான கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. பிஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி சோனி சென்சார் கேமரா மற்றும் 7 வருட ஓஎஸ் அப்டேட்டை கொடுத்துள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத விலை குறைப்பு கொடுக்கப்பட்டு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.10,000 விலை குறைப்பு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. மொத்தமாக ரூ.12,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a Specifications): கூகுள் சென்சார் ஜி4 (Google Tensor G4) ப்ராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்செட்டை (Titan M2 Security Chipset) இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. மேலும், எச்டிஆர் (HDR), 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது.
422.2 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1800 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னல் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனை இந்த டிஸ்பிளே கொடுத்துள்ளது. 48 எம்பி குவாட் பிடி டூயல் பிக்சல் (Quad PD Dual Pixel) மெயின் கேமரா கிடைக்கிறது. சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜிகளை கொண்டுள்ளது. மேலும், 8X சூப்பர் ரெஸ் ஜூம் (Super Res Zoom) கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பிடிஏஎப் போகஸ் கொடுத்து உள்ளது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) உள்ளது.
நைட் சைட் (Night Sight), ஆட் மீ (Add Me), போர்ட்ராய்டு மேட் (Portrait Mode), பேஸ் அன்பிளர் (Face Unblur), லாங் எக்ஸ்போசர் (Long Exposure), ரியல் டோன் (Real Tone), பனோரமா (Panorama), ப்ரீகொன்ட் பேஸ்கள் (Frequent Faces), டாப் ஷாட் (Top Shot) போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. மேலும், மேஜிக் எரைசர் (Magic Eraser), பெஸ்ட் டேக் (Best Take) உள்ளிட்ட பீச்சர்களும் உள்ளன.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சாருடன் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் கிடைக்கிறது. 23W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5100mAh பேட்டரி கொடுத்து உள்ளது.
8.9 எம்எம் தடிமன் மற்றும் 185.9 கிராம் எடை கிடைத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் வை-பை 6இ கிடைக்கிறது. அப்சிடியன் (Obsidian), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் ஐரிஸ் (Iris) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








