Home
Mobile

ஏப்.16 குறிச்சாச்சு! OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. IP68 ரேட்டிங்.. 5100mAh பேட்டரி.. 23W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு கொஞ்சமும் குறையில்லாதபடி அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கிய கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) போனின் விற்பனை ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்குகிறது. கூகுள் ஏஐ (Google AI), 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள், ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 5100mAh பேட்டரி, 23W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 9ஏ போனானது, மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பில்ட்-குவாலிட்டியிலும் பட்டையை கிளப்பியதால், எப்போது விற்பனைக்கு வரும் என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கான நேரம் ஏப்ரல் 16ஆம் தேதி வர இருக்கிறது.

ஏப்.16 குறிச்சாச்சு! OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. IP68 ரேட்டிங் மாடல்!

கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a Specifications): இந்த பிக்சல் போனில் அப்சிடியன் (Obsidian), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் ஐரிஸ் (Iris) ஆகிய கலர்கள் வருகின்றன. சாடின் மெட்டல் ஃபிரேம் (Satin Metal Frame) மற்றும் மேட் பினிஷிங் பேக் (Matte Finishing Back) பாடியில் பிரீமியம் குவாலிட்டி கொடுக்கிறது. இந்த பேக் பேனலில் ஃபிங்கர்பிரிண்ட் ரெசிஸ்டன்ட் கோட்டிங் (Fingerprint Resistant Coating) கிடைக்கிறது.

பவர் பட்டன் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Fingerprint Unlock) கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது. இதுபோக IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாக டிசைனில் பிரீமியம் போன்களின் எதிர்பார்க்கப்படும் அனைத்து பீச்சர்களும் கிடைக்கின்றன. இப்போது டிஸ்பிளே பீச்சர்களுக்கு வருவோம்.

இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது. 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அக்ட்வா டிஸ்பிளே (Actua Display) கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் 422.2 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது.

மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த பிக்சல் போனில் சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சார் கொண்ட 48 எம்பி குவாட் பிடி டூயல் பிக்சல் (Quad PD Dual Pixel) மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 8X சூப்பர் ரெஸ் ஜூம் (Super Res Zoom), சிஎல்ஏஎப் (CLAF) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி கிடைக்கிறது.

மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilisation) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சாருடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆட் மீ (Add Me), மேக்ரோ போகஸ் (Macro Focus), நைட் சைட் (Night Sight), ஆஸ்ட்ரோபோட்டோகிராபி (Astrophotography), ரியல் டோன் (Real Tone) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

எடிட்டிங் பீச்சர்களை பார்க்கையில் மேஜிக் எடிட்டர் (Magic Editor), ஆட்டோ ஃபிரேம் (Auto Frame), ரீஇமேஜின் (Reimagine), மேஜிக் எரைசர் (Magic Eraser), பெஸ்ட் டேக் (Best Take), போட்டோ அன்பிளர் (Photo Unblur) மற்றும் போர்ட்ராய்டு லைட் (Portrait Light) போன்ற எடிட்டிங் பீச்சர்கள் கிடைக்கின்றன. ரியர் மற்றும் செல்பீயில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 5X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது.

விலாகர்களுக்கான எடிடிங் பீச்சர்களும் இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் கிடைக்கிறது. ஆகவே, ஆடியோ மேஜிக் எரைசர் (Audio Magic Eraser), மேக்ரோ போகஸ் வீடியோ (Macro Focus Video), சினிமாடிக் பேன் (Cinematic Pan), 4K டைம்லேப்ஸ் (Timelapse), ஆஸ்ட்ரோபோட்டோகிராபி டைம்லேப்ஸ் (Astrophotography Timelapse), நைட் சைட் டைம்லேப்ஸ் (Night Sight Timelapse) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஆடியோவுக்கு பிரத்யேமாக சில பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, ஸ்டீரியோ ரெக்கார்டிங் (Stereo Recording), ஸ்பீச் என்ஹான்ஸ்மெண்ட் (Speech Enhancement), விண்ட் நாய்ஸ் ரெடக்சன் (Wind Noise Reduction) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல செக்யூரிட்டி மற்றும் பிக்சல் ட்ராப் அப்டேட்களும் உள்ளன.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஐபோன்களை போலவே கூடுதலாக செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. ஆகவே, டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப்புடன் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் வருகிறது. எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் மட்டுமல்லாமல், கிரைசிஸ் அலெர்ட் (Crisis Alerts) மற்றும் கார் கிரஸ் டிடெக்சன் (Car Crash Detection) வருகிறது.

மேலும், எர்த்குவாக் அலெர்ட் (Earthquake Alerts) மற்றும் தெப்ட் புரொடெக்சன் (Theft Protection) கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் 5100mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 23W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 2 மைக்ரோ போன்கள் வருகின்றன.

ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant) பயன்படுத்தலாம். இந்த பிக்சல் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 43,080 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ. 51,715 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. இங்கு இந்த வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது.

ரூ.3000 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளும் கிடைக்க இருக்கிறது. ரூ.3000 டிஸ்கவுண்ட பெற எச்டிஎப்சி கிரெடிட் கார்டு தேவைப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a With 48MP Camera Sale From April 16 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X