Home
Mobile

வாங்குனா இந்த கூகுள் போனை வாங்கணும்.. சோனி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. 7 வருட OS அப்டேட்.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது கூகுள் பிக்சரல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். மேலும் இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளே வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

வாங்குனா இந்த கூகுள் போனை வாங்கணும்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a Specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி எச்டிஆர் டிஸ்பிளே வசதியுடன் கூகுள் பிக்சரல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2424 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அம்சங்களை இந்த போனில் பயன்படுத்த முடியும்.

கூகுள் டென்சார் ஜி4 பிராசஸர் உடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) பேக் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் அறிமுகமாகும்.

OIS ஆதரவு கொண்ட 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்787 மெயின் சென்சார் + 13எம்பி சோனி ஐஎம்எக்ஸ்712 அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவு, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த புதிய கூகுள் போன்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) ) வசதி கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன். மேலும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த கூகுள் போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 2 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

வாங்குனா இந்த கூகுள் போனை வாங்கணும்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு 5ஜி எஸ்ஏ/என்ஏ, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3 எல்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.41,950 விலையில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo credit: @onleaks x @androidheadlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X