Home
Mobile

எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்.. 5100mAh பேட்டரி.. வருகிறது புதிய Google பிக்சல் போன்.. எந்த மாடல்?

கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஆனாலும் கூகுள் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a specifications): பெரிய டிஸ்பிளே வசதியுடன் கூகுள் பிக்சல் 9ஏ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பிரைட்னஸ் (1800 nits brightness), எச்டிஆர் (HDR) ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்.. வருகிறது புதிய Google பிக்சல் போன்..

தரமான கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டென்சார் ஜி4 சிப்செட். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கூகுள் பிக்சல் 9ஏ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த பிக்சல் போன். கூகுள் பிக்சல் 9ஏ போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

குறிப்பாக 48எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5100mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 23W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த பிக்சல் போன் வெளிவரும்.

மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.43,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த பிக்சல் போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a release date leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X