Home
Mobile

செதுக்கி வச்சிட்டாங்க.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5100mAh பேட்டரி.. 23W சார்ஜிங்.. எந்த Pixel மாடல்?

பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) போனின் பீச்சர்கள், அறிமுக தேதி மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி மிரளவிட்டு வருகின்றன. இப்போது, டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்கள் அடங்கிய இமேஜ்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற விட்டுள்ளது. இதனால் கூகுள் பிக்சல் பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த போனின் பீச்சர்கள் எப்படி இருக்கும்? பட்ஜெட் எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 19ஆம் தேதி இந்த போன் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே பீச்சர்கள், டிசைன், விலை விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஆனால், கூகுள் நிறுவனம் இதை உறுதி செய்யவில்லை. இப்போது, பேயோனி (Peony), ஐரிஸ் (Iris), அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்ஸ்லைன் (Porcelain) கலர் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

செதுக்கி வச்சிட்டாங்க.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5100mAh பேட்டரி!

காம்பாக்ட் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருப்பது அந்த இமேஜ்களில் தெரிகிறது. அதேபோல கேமரா பம்ப்பில் இருந்து ஃபிளாஷ் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட பிளாட் கேமரா சிஸ்டமாகவே இருக்கிறது. இந்த கலர் மற்றும் டிசைன் விவரங்கள் மட்டுமே புதிதாக வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, கசிந்த பீச்சர்களை பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a Specifications): இந்த பிக்சல் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 6.2 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஃபீச்சர் டிராப் அப்டேட்களை கொடுக்கிறது. டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் மற்றும் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் வர இருக்கின்றன.

இந்த பிக்சல் போனில் சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சார் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், பிடிஏஎப் ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ஷூட் உள்ளது. இதே 4K ஷூட் கொண்ட 13 எம்பி செல்பீ உள்ளது.

இந்த ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சார் கிடைக்கிறது. 23W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குக்கு 5100mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, பேக்கப் இந்த போனில் கூடுதலாக எதிர்பார்க்கலாம். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட அம்சங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இந்த கூகுள் பிக்சல் 9ஏ போன் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி, மார்ச் 26ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,290ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.51,965ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பிக்சல் 8ஏ மாடலை விட அதிகம்.

Image Credit: Android Headlines & OnLeaks

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a Official Images Surfaced Online Expected To Launch on March 19 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X