Home
Mobile

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. 3 இலவசங்கள்.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. Google Pixel 9a விற்பனை ஆரம்பம்!

கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. இது கடந்த மார்ச் மாதம், ஆப்பிளின் பட்ஜெட் விலை ஐபோன் ஆன ஐபோன் 16ஏ மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமானது. தற்போது இது 3 வகையான இலவசங்கள், ரூ.3000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

எவ்வளவு பெரிய பிராண்டு ஆக இருந்தாலும் இந்திய சந்தை என்று வந்துவிட்டால் இலவசங்கள் அவசியம் என்பதை கூகுள் நிறுவனம் நன்றாக புரிந்துகொண்டது போல் தெரிகிறது. இதை "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா மொமெண்ட்" என்றும் குறிப்பிடலாம். பிக்சல் 9ஏ மீது அப்படி என்னென்ன இலவச ஆபர்கள் கிடைக்கிறது? இதன் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

3 இலவசங்கள்.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. Google Pixel 9a விற்பனை ஆரம்பம்!

இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை சலுகைகள்: பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஐரிஸ், அப்சிடியன் மற்றும் போர்சிலேன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா க்ரோமா போன்ற ரீடெயில் விற்பனையாளர்கள் வழியாக பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை ஆன்லைனில் வாங்கலாம். அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ திட்டங்களும் கிடைக்கின்றன.

கூடுதலாக, பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனும் 3 இலவச சேவைகளும் / சந்தாக்களும் கிடைக்கும்:
1. மூன்று மாத கூகுள் ஒன் சந்தா
2. மூன்று மாத யூட்யூப் பிரீமியம் சந்தா
3. ஆறு மாத ஃபிட்பிட் பிரீமியம் சந்தா

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- டூயல் சிம் (நானோ+இசிம்)
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே

- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)

- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்

- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

Best Mobiles in India

English summary
Google Pixel 9a India Sale Started 3 Free Subscriptions Rs 3000 Bank Discount Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X