Home
Mobile

இதுதான் புதிய Google பிக்சல் போன்.. 48எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. என்ன விலை? எப்போது அறிமுகம்?

கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரங்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆன்லைனில் வெளியான புகைப்படங்கள் அடிப்படையில், டூயல் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இதுதான் புதிய Google பிக்சல் போன்.. 48எம்பி கேமரா.. எப்போது அறிமுகம்?

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a specifications): 6.3-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இநதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை விட பெரிய டிஸ்பிளே உடன் இந்த பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மழிகவம் அருமையாக இருக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டென்சார் ஜி4 சிப்செட். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கூகுள் பிக்சல் 9ஏ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த பிக்சல் போன். கூகுள் பிக்சல் 9ஏ போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

48எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இதுதான் புதிய Google பிக்சல் போன்.. 48எம்பி கேமரா.. எப்போது அறிமுகம்?

5000mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,300 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பட்ட புதிய அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo credit:@onleaks @androidheadline, @feni_book

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a images and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X