தெரிஞ்சு போச்சு.. வெயிட் பண்ண வச்ச மாடல்.. Google பிரியர்களை ரேட்ல முடிச்சு விட்டாச்சு.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9ஏ (Pixel 9a) போனின் வெளியீட்டுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, டிசைன், கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்து எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்தது. ஆனால், இப்போது, ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் இடையேயான விலை விவரங்கள் கசிந்து, சற்று பிரீமியம் காட்டி இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
கூகுள் பிக்சல் 9ஏ போனானது, மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, அந்த போனின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, ஸ்டோரேஜ் வேரியண்ட்களுக்கு இடையே இருக்கும் விலை விவரங்கள் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) கசிந்துள்ளது. இதில் ஹை-எண்ட் வேரியண்ட் கூடுதல் விலைக்கு வெளியாகும் என்பது தெரிகிறது.

அதாவது, அமெரிக்க மார்கெட்டில் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.43,184) ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது ஏற்கனவே வெளியான கூகுள் பிக்சல் 8ஏ மாடலுக்கு இருந்த விலை போலவே இருக்கிறது. ஆனால், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை அதிகமாக இருக்கபோவது தெரிகிறது.
ஏனென்றால், கூகுள் பிக்சல் 9ஏ போனின் 256 ஜிபி வேரியண்ட்டின் விலை 599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.51,841) ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலையானது 100 டாலர்கள் அதிகமாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்த விலை அமெரிக்க விலை நிர்ணயமாகும், இந்தியாவில் வேறுபாடுகள் இருக்கலாம். வெளியீட்டின்போது தெரியவரும்.
கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a Specifications): இந்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமேயாகும். அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கூகுள் டென்சர் ஜி4 (Google Tensor G4) ப்ராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் கொடுக்கிறது.
இதில் 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கிடைக்கிறது. 2700 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் 48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்8 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார் கிடைக்கிறது.
இதுபோக பிடிஏஎப் ஆட்டோ போகஸ் பேக் செய்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 13 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. டிஸ்பிளேவில் கொரில்லா கிளாஸ் கிடைத்தது, அதற்கு ஏற்ப IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் பாடி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இதில் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் 23W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி கிடைக்கிறது. அலுமினியம் மிடில் ஃபிரேம் பாடியுடன் 8.9 மிமீ தடிமன் மற்றும் 185 கிராம் எடை கிடைக்கிறது. இந்திய மார்கெட்டிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. கோடையில் வெளியீடு இருப்பதால், விரைவில் தெரிந்துவிடும்.
Image Credit: OnLeaks & Android Headlines


Click it and Unblock the Notifications








