Home
Mobile

நாங்களும் குறைப்போம்ல.. ஒரே அடியாக ரூ.5000 விலை குறைப்பு.. பிச்சுக்கிட்டு பறக்குது இந்த Pixel போனின் ஆர்டர்!

கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிக்சல் 10 சீரீஸின் கீழ் "பட்ஜெட் விலை" மாடல் ஆக பிக்சல் 10ஏ (Pixel 10a) மீதான பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

பிக்சல் 10ஏ மாடலின் விலை லீக் ஆன வேகத்தில் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5000 விலை குறைப்பிற்கு பின்னர் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் லீக் ஆன அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

நாங்களும் குறைப்போம்ல.. ஒரே அடியாக ரூ.5000 விலை குறைப்பு!

பிக்சல் 9ஏ மீது ரூ.5000 விலை குறைப்பு: பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில், தற்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமான போது இதன் விலை ரூ.49,999 ஆக இருந்தது. ஆக ரூ.5000 நேரடி விலைகுறைப்பை பெற்றுள்ளது.

பிக்சல் 10ஏ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிக ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட மாடல்கள் இன்னும் அதிக விலை நிர்ணயத்தை பெறலாம்.

கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

- 119.7-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர்கொண்ட 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- வெரிசோனின் சான்றிதழ் செயல்முறையை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது; ஆக பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம்

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a gets Rs 5000 Price Cut Just After Pixel 10a Specifications leaked online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X