iPhone-க்கு போட்டியாக Google களமிறக்கும் புது Google Pixel 9a.. இந்த போனின் அம்சங்களை பார்க்கணுமே நீங்க..
கூகுள் (GOOGLE) நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான புதிய கூகுள் பிக்சல் 9a (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாகவே பல லீக் தகவல்கள் இன்றைய நாள் வரை தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும், பகுதி பகுதியாக வெளிவந்த லீக் தகவல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இப்போது இந்த போனின் முழு சிறப்பம்ச தகவலை வெளியிட்டுள்ளன. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 9a (Google Pixel 9a) ஸ்மார்ட்போனின் பெயர் கடந்த அக்டோபர் மாதம் சில டெக் வலைத்தளங்களில் காணப்பட்டது. முதலில் இந்த போனின் வருகை குறித்து மட்டும் குறிப்பிடப்பட்டது. பிறகு சில அம்சங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது இந்த புதிய போனின் நிறம் (Google Pixel 9a colours) பற்றிய தகவலுடன், இதன் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் முழு சிறப்பம்ச விபரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

iPhone-க்கு போட்டியாக Google களமிறக்கும் புது Google Pixel 9a:
Google Pixel 9a ஸ்மார்ட்போன் சாதனம் ஒபிசிடியன் (Obsidian), போர்ஸலைன் (Porcelain), ஐரிஸ் (Iris) மற்றும் பியோனி (Peony) போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. இத்துடன், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.285" இன்ச் அளவு கொண்ட 1080 x 2424 பிக்சல் (pixels) உடைய FHD+ OLED HDR டிஸ்பிளேவை (display) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 2700 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) ஆதரவை கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் (Corning Gorilla Glass 3 Protection) வருகிறது. இந்த கூகுள் பிக்சல் போன் (Google Pixel Phone) கூகுள் டென்ஸர் ஜி4 சிப்செட் (Google Tensor G4 processor) உடன் வருகிறது.
கூகுள் பிக்சல் 9a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Google Pixel 9a Expected Specifications):
இதில் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 security chip) பாதுகாப்பும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8GB LPDDR5X ரேம் (RAM), 128GB மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெரும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) உடன் 7 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை பெரும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய கூகிள் பிக்சல் 9a (Google Pixel 9a) சாதனம் 48MP + 13MP ரியர் கேமராவுடன் (camera) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Samsung GN8 sensor உடன் LED பிளாஷ் லைட்டை பெரும். முன்பக்கத்தில், 13MP செல்பி கேமராவை பெரும் என்று கூறப்படுகிறது. கூகுள் போன் முதல் முறையாக IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water and dust Resistant) அம்சத்தை பெரும்.
கூகுள் பிக்சல் 9a எதிர்பார்க்கப்படும் விலை (Google Pixel 9a Expected Price):
இந்த கூகுள் பிக்சல் 9a போனில் 5G SA/NA, 4G VoLTE, Wi-Fi 6E 802.11ax (2.4/5 GHz), Bluetooth 5.3 LE, GPS, GLONASS, Galileo, QZSS, BeiDou, NavIC, USB Type C 3.2, NFC இணைப்பு அம்சங்களை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 5100mAh பேட்டரி உடன் 23W வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை பெறக்கூடும்.
இதன் அறிமுகம் வரும் மார்ச் 2025 நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 42,335 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








