Home
Mobile

1 இல்ல 4 ஆப்ஷன் இருக்கு.. Google Pixel 9a க்கு பதிலாக வேறு எந்த போனை வாங்கலாம்?

கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடல் ஆன பிக்சல் 9ஏ, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களுக்கு உள்ளயே சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம் ஆனது மற்ற பிக்சல் 9 மாடல்களில் காணப்படும் மோடத்துடன் ஒப்பிடும் போது மிகவும் பழையதாக உள்ளது.

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5300 மோடம் (Samsung Exynos 5300 modem) உள்ளதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இது கடந்த அக்டோபர் 2022 இல் அறிமுகமான பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) உள்ள அதே மோடம் ஆகும். இந்த தகவல் அடுத்த மாதம் தொடங்கும் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விற்பனையை பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pixel 9a க்கு பதிலாக வேறு எந்த போனை வாங்கலாம்?

பிக்சல் 9ஏ ஆனது பிக்சல் 9 சீரீஸ் மாடல்களை போலவே டென்சர் ஜி4 சிப்செட்டால் (Google Tensor G4 Chipset) தான் இயக்கப்படுகிறது. இருந்தாலும் கூட உங்களுக்கு பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை ஆர்வம் அல்லது ஆசை குறைந்து விட்டது என்றால்.. பிக்சல் 9ஏ மாடலுக்கு பதிலாக நீங்கள் வேறு என்னென்ன ஸ்மார்ட்போங்களை ஆல்டர்நேட்டிவ் போன்களாக கருத்தில் கொள்ளலாம் (Google Pixel 9a Alternatives) என்கிற பட்டியல் இதோ:

01. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

02. ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e): இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 16இ முக்கிய அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும்.

ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது.

பேட்டரி லைஃப் மற்றும் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது

எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.

03. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G): இது பிக்சல் 9ஏ மாடலுக்கான மற்றொரு சிறந்த ஆல்டர்நேடிவ் ஸ்மார்ட்போன் ஆகும். இது கேலக்ஸி எஸ்24 சீரீஸின் மலிவு விலை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாகும். 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்ஸினோஸ் 2400இ சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் அனைத்து சமீபத்திய கேலக்ஸி ஏஐ அம்சங்களையும் வழங்குகிறது. இது ரூ.59999 அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ரூ.44999 என்கிற ஆபர் விலையில் கிடைக்கிறது.

04. சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G): சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் தான் அறிமுகமானது. இது உண்மையில் பிக்சல் 9ஏ மாடலுக்கு மிகவும் தகுதியான போட்டியாளராக உள்ளது. பல பகுதிகளில் இது பிக்சல் 9ஏ மாடலை பின்னுக்கும் தள்ளுகிறது.

04. சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G): சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் தான் அறிமுகமானது. இது உண்மையில் பிக்சல் 9ஏ மாடலுக்கு மிகவும் தகுதியான போட்டியாளராக உள்ளது. பல பகுதிகளில் இது பிக்சல் 9ஏ மாடலை பின்னுக்கும் தள்ளுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1580 சிப்செட், 12GB வரை ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ், 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது ரூ.41,999 முதல் வாங்க கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே கிடைக்கும்.இது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர்களில், ஏப்ரல் 2025 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்; சரியான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a Best Alternative Smartphones OnePlus 13R iPhone 16e and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X