பொளக்குது விற்பனை.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 4700mAh பேட்டரி.. மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) போனுக்கு நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) போன் வெளியாக இருப்பதால், அதற்கு முந்தைய பிக்சல் மாடலான இதற்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 4700mAh பேட்டரி போன்ற தரமான பீச்சர்களை கொடுக்கும் இந்த கூகுள் பிக்சல் 9 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 10 மட்டுமல்லாமல், கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) ஆகிய மாடல்கள் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. அதே தேதியில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. இதனால் முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது.

இப்போது, கூகுள் பிக்சல் 9 போனுக்கு ரூ.5,000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இந்த விலையுடன் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது, இந்த பிக்சல் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.5,000 விலை குறைப்பு கிடைக்கிறது.
ஆகவே, ரூ.74,999 பட்ஜெட்டில் இப்போது வாங்க கிடைக்கிறது. இதே விலையில் ஆன்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கும் கூடுதல் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களையும் பெற்று கொள்ளலாம். இப்போது, இந்த பிக்சல் போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 9 அம்சங்கள் (Google Pixel 9 Specifications): இந்த பிக்சல் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. ஆனால், 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைப்பதால், வேறு மாடல்களுக்கு செல்ல வேண்டியது இருக்காது. அதேபோல 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்கள் கிடைக்கும். ஈசிம் மற்றும் நானோ சிம் சப்போர்ட் உள்ளது.
பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ள முடியும்.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்செட் கொண்ட பர்ஃபாமென்ஸ் யூனிட் கிடைக்கிறது. கேமராவில் சென்சான் மற்றும் பீச்சர்கள் என்று ஒட்டுமொத்தமாக பட்டையை கிளப்பி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கிறது.
மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்கே சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி, எல்டிஏஎப் ஆட்டோ போகஸ் மட்டுமல்லாமல், சினிமாடிக் பிளர் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8K ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. 10.5 எம்பி செல்பீ கேமரா மற்றும் அதில் சாம்சங் 3ஜே1 சென்சார் கிடைக்கிறது. 4700mAh பேட்டரி கிடைக்கிறது.
27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 9 போனை விண்டர்கிரீன் (Wintergreen), பெயோனி (Peony), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்சை விட மலிவான விலைக்கு இது பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








