எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. iPhone 17 வருது அதனால.. பாதிக்கு பாதி விலையில் Pixel மாடல்!
இன்று (செப்டம்பர் 9 ஆம் தேதி) நடக்கும் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் (iPhone 17 Series Launch) தான் டெக் உலகின் ஹட் டாப்பிக். புதிய ஐபோன் மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து பழைய ஐபோன் மாடல்களுக்கு நல்ல விலை குறைப்பு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில்.. "இப்போதைக்கு என்னால புது போன்லாம் ரிலீஸ் பண்ண முடியாது. ஆனா போட்டிக்கு பழைய மாடலுக்கு விலை குறைப்பை கொடுக்க முடியும்!" என்கிற படியாக.. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் (Google Pixel) மாடல் ஒன்றின் மீது அபார டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதென்ன மாடல்? அது பிக்சல் 9 (Pixel 9) மாடல் ஆகும். புதிய பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) அறிமுகமான பின்னர் விளைவாக பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே குறைந்துள்ளது தான். இதற்கிடையில் பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில், வரவிருக்கும் சிறப்பு விற்பனையின் போது இது ரூ.40,000 க்கும் குறைவான விலையில் (Under Rs.40000) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த போஸ்டரில் - செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையின் போது - பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.3X,XX9 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக குறைந்தபட்சம் இது ரூ.39,999 ஆக இருக்கலாம் அல்லது அதிகப்பட்சம் ரூ.31,999 ஆக கூட இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பிளிப்கார்ட்டில் ரூ.64,999 க்கு வாங்க கிடைத்தது. இப்போது பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-யின் ஒரு பகுதியாக இன்னும் மலிவான விலைக்கு, கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலைக்கு வாங்க கிடைக்கவுள்ளது.
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9 Specifications):
- டூயல் சிம் (நானோ+ இசிம்) ஆதரவு
- 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- 6.3 இன்ச் ஆக்சுலா ஓஎல்இடி டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட்
- 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் 8எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம்) ப்ரைமரி கேமரா
- 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,700எம்ஏஎச் பேட்டரி
பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்:
- பிக்சல் 10 (Pixel 10) ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.79,999
- பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro) ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,09,999
- பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,24,999
- பிக்சல் 10 ப்ரோ போல்ட் (Pixel 10 Pro Fold) ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,72,999


Click it and Unblock the Notifications