Home
Mobile

சுந்தர் சார் இது நியாயமா? Pixel 9 Pro XL, Pixel 9 Pro Fold-ஐ மட்டும் நம்மகிட்ட தள்ளிவிட்ட Google..என்ன விலை?

உலகம் முழுவதும் உள்ள டெக் ஆர்வலர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு டிவைஸ் பிரியர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ள மேட் பை கூகுள் நிகழ்வானது (Made by Google Event) ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்நிகழ்வில் கூகுளின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 9 சீரிஸ் (Pixel 9 Series) தொடங்கி ஆண்ட்ராய்டு 15 பப்ளிக் ரிலீஸ் (Android 15 Public Release) வரையிலாக பல முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் நிகழ உள்ளன.

குறிப்பாக கூகுளின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 9 சீரீஸ் மாடல்கள் ஆனது ஆகஸ்ட் 13 நடக்கும் உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த நாளே, அதாவது ஆகஸ்ட் 14 ஆம் தேதியே இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த பிளிப்கார்ட் (Flipkart) டீஸர் ஆனது பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) ஆகிய இரண்டு போன்களை மட்டுமே டீஸ் செய்துள்ளது.

Pixel 9 Pro XL, Pixel 9 Pro Fold-ஐ மட்டும் நம்மகிட்ட தள்ளிவிட்ட Google

இத விளைவாக கூகுளின் பிக்சல் 9 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் 4 மாடல்களில் 2 மாடல்கள் மட்டுமே இந்தியாவிற்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரீஸின் கீழ் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் என மொத்தம் 4 மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவைகளில் 2 மாடல்கள் மட்டுமே இந்தியாவிற்கு வரும் என்பது போல் தெரிகிறது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக மைக்ரோசைட் 'லைவ்' ஆகியுள்ளது. அந்த டீஸரில் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகிய 2 மாடல்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிக்சல் 9 மற்றும் மிட்-டையர் பிக்சல் 9 ப்ரோவை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கம் கூகுளுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

இருப்பினும் இது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அல்ல. பிளிப்கார்ட் வலைத்தளமானது கூகுளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சில்லறை விற்பனையாளராக இருப்பதால் இதுபோன்ற ஊகங்கள் தோன்றக்கூடும். ஆனால் எதை அறிமுகம் செய்ய வேண்டும், அதை எங்கே விற்பனை செய்ய வேண்டும் என்கிற முடிவை கூகுள் நிறுவனம் தான் வெளிப்படுத்த வேண்டும்.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெர்னல் கூகுள் ஸ்டோர் இந்தியா (Google Store India) இணையதளமானது பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடலை காட்டிலும் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல்களை குறிப்பிடுகிறது. பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான வடிவமைப்புடன், பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9-ல் டூயல் கேமரா செட்டப் இடம்பெறலாம்.

பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இருக்கும். ஏனெனில் இந்நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஆன பிக்சல் ஃபோல்ட் இந்தியாவிற்கு வரவில்லை.

இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.1,50,600 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல் ஆனது சுமார் ரூ .1,01,00 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ வேரியண்ட் ஆன பிக்சல் 9 ப்ரோவானது ரூ.84,000 க்கும், வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9 ஆனது ரூ.75,500 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9 Pro XL Pixel 9 Pro Fold India Launch on Aug 14 Check Out Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X