Home
Mobile

அக்.17 மிரள போகுது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4700mAh பேட்டரி.. AI அசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது. 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 30X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 27W வயர்டு சார்ஜிங் கொண்ட 4700mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கிய கூகுள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro) போனின் ப்ரீ-ஆர்டர் அக்.17ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

கூகுள் பிக்சல் 9 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 9 Pro Specifications): இந்த பிக்சல் போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.3 இன்ச் (1280 x 2856 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வருகிறது.

அக்.17 மிரள போகுது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4700mAh பேட்டரி!

7 வருடங்களுக்கான ஓஎஸ், செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS) வருகிறது. கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) பேக் செய்யப்பட்டுள்ளது. பில்ட்-இன் ஜெனிமி ஏஐ அசிஸ்டன்ட் வருகிறது. இதுவொரு பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு ஏஐ அசிஸ்டன்ட் வெர்ஷனாகும்.

நானோ சிம் (Nano SIM) மற்றும ஈசிம் (eSIM) சப்போர்ட் உள்ளது. சாம்சங் ஜிஎன்கே (Samsung GNK) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் எல்டிஏஎப் (LDAF) போகஸ் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சாருடன் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 5X சென்சார் ஜூமிங், 30X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. ஆப்பிள் போன்களை போல சினிமாடிக் பிளர் மோட் கொண்ட 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ பீச்சர்களும் வருவதால், பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சாருடன் 42 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரிலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் வருகிறது. டெம்பரேச்சர் சென்சார் (Temperature Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Ultrasonic In-display Fingerprint Scanner) வருகிறது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. 27W வயர்டு சார்ஜிங் மற்றும் 21W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4700mAh பேட்டரி வருகிறது. போர்சலின் (Porcelain), ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz), ஹேஸ் (Haze) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகியது. இருப்பினும், விற்பனை தொடங்காததால், கூகுள் பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடில் காத்திருந்தனர். இப்போது, அக்டோபர் 17ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது. இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ போனில் விலை ரூ. 1,09,999 ஆக இருக்கிறது. அறிமுக சலுகையுடன் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9 Pro With 50MP Camera Pre Order on October 17 From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X