பொளக்குது ப்ரீ-ஆர்டர்.. ரூ.10000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 16GB ரேம்.. 30X டிஜிட்டல் ஜூமிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கூகுள் பிரியர்களை கழுகு போல காத்திருக்க செய்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro) போனின் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. அடித்து புடித்து ஆர்டர் போடும்படி ரூ.10000 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7,999 மதிப்பில் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ (Google Pixel Buds Pro) கொடுக்கப்படுகிறது. சோனி சென்சார் டெலிபோட்டோ கேமரா, எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே போன்ற நம்ப முடியாத பீச்சர்களை கொடுக்கும் இந்த பிக்சல் போனின் விவரம் இதோ.
இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. இப்போது, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.10,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.99,999 பட்ஜெட்டில் இந்த பிக்சல் போனை வாங்கி கொள்ளலாம்.

இந்த போனுடன் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோவை ஆர்டர் செய்தால், ரூ.7,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதன் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.1000 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது. இதற்கும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும்.
அல்ட்ரா பிரீமியம் டிசைனில் போர்சலின் (Porcelain), ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz), ஹேஸ் (Haze) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.1,00,000 பட்ஜெட்டில் வாங்கும் அளவுக்கு இந்த போனின் அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதலில் முழு பீச்சர்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது.
முதலில் ஏஐ பீச்சர்களை பற்றி தெரிந்து கொள்வோம். ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இது அட்வான்ஸ் வெர்ஷனாகும். பவர் பட்டன் மூலம் எளிதாக இந்த ஏஐ அசிஸ்டன்ட்டை பயன்படுத்தலாம். பேட்டோ, டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் ஆகியவற்றின் மூலம் கம்யூனிகேட் செய்யலாம். கேமராவிலும் ஏஐ பீச்சர்கள் மிரளவிடுகின்றன.
ஆட் மீ (Add Me) பீச்சர் மூலம் குரூப் போட்டோகளில் இல்லாத ஒரு நபரை எளிதாக ஆட் செய்து கொள்ளலாம். பிளஸ் மேஜிக் எடிட்டர் (Plus Magic Editor) பீச்சர் வருகிறது. இந்த பீச்சர் மூலம் ஜெனிரேட்டிவ் ஏஐ மூலம் எடிட் செய்து கொள்ளலாம். பிக்சல் ஸ்டூடியோ (Pixel Studio) மூலம் இமேஜ் ஜெனிரேட்டர் (Image Generator) சப்போர்ட் கிடைக்கிறது.
பிக்சல் வெதர் (Pixel Weather) மூலம் ஏஐ சப்போர்ட்டெட் வெதர் அப்டேட்களை தெரிந்து கொள்ளலாம். கால் நோட்ஸ் (Call Notes) பீச்சர் வருகிறது. கால்களில் பேசிக் கொண்டிருக்கும்போது முகவரி, மொபைல் நம்பர் அல்லது முக்கிய தகவல்களை எழுத வேண்டிய அவசியமில்லை. இந்த பீச்சர் மூலம் ஆன்-டைமில் டெக்ஸ்ட் மூலம் சேமித்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 9 Pro Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.3 இன்ச் (1280 x 2856 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS), கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட், டைட்டன் எம்2 (Titan M2 Chip) சிப் வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 42 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 27W ஃபாஸ்ட் சார்ஜிங் + 21W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4700mAh பேட்டரி வருகிறது. 30X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது. டெம்பரேச்சர் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








