இப்படி இருக்கனும் ஆஃபர்.. ரூ.23,099 ரேட் கட்ல Pixel போன்.. 7 வருட OS அப்டேட்.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, இதுவரையில் கிடைக்காத மலிவு விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.23,099 நேரடி விலை குறைப்பு போக ரூ.86,900 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.4,500 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.60,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது.

போர்ஸ்லைன் (Porcelain), ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz), ஹேசல் (Hazel) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. இதுபோக செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்கள் (Feature Drop Updates) கிடைக்கின்றன. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 9 Pro Specifications): 6.3 இன்ச் (1280 x 2856 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிஆர் (HDR), 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது.
சாம்சங் ஜிஎன்கே (Samsung GNK) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, எல்டிஏஎப் போகஸ் கிடைக்கிறது. 30X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது.
மேலும், சினிமாடிக் பிளர் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 42 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார், ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், சூப்பர் ரெஸ் ஜூமிங் வீடியோ (Super Res Zooming Video) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
பிக்சல் ஸ்டூடியோ, ஜெமினி லைவ், ஆட் மீ, நைட் சைட் வீடியோ போன்ற ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4700mAh பேட்டரி மற்றும் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 21W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுக்கப்படுகிறது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பெற்று கொள்ளலாம். அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) மற்றும் டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ / எஸ்என்ஏ (5G SA/NA) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








