Home
Mobile

ஒட்டுமொத்த Foldable Phone-களுக்கும் ஆப்பு வச்ச Google.. Pixel 9 Pro Fold இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒட்டுமொத்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கும் வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேட் பை கூகுள் 2024 நிகழ்வின் (Made by Google 2024 Event) முக்கிய அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது பிக்சல் பிராண்டட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும் என்றாலும் கூட, இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கூகுள் போல்டபிள் ஸ்மார்ட்போனாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்து.

சுவாரசியமாக இந்த ஆண்டு, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த சீரிஸ் முழுவதுமே கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் (Google Tensor G4 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன முக்கிய அம்சங்களையோ பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

Google Pixel 9 Pro Fold இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (Nano+eSIM) சப்போர்ட் உடன் ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. கூகுளின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 8 இன்ச் LTPO OLED சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளே (120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது. வெளிப்புறத்தில், 6.3 இன்ச் OLED ஆக்ச்சுவல் டிஸ்பிளே (120 Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறமாக, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/1.7 அபெர்ச்சர்) + 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.2 அபெர்ச்சர்) + 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம், மற்றும் எஃ ப்/3.1 அபெர்ச்சர்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளன.

கவர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனான 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் பிரத்யேகமான பல கேமரா மற்றும் எடிட்டிங் அம்சங்களும் உள்ளன. இதில் Add Me, Hands-free astrophotography, Face Unblur, Top Shot, Frequent Faces, Video Boost, Wind Noise Reduction, Audio Magic Eraser, Macro Focus Video, Made You Look மற்றும் Magic Editor ஆகியவைகளும் அடங்கும்.

கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4650 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இதை பிபிஎஸ் சார்ஜர் (45W) மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கிறது மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Obsidian மற்றும் Porcelain கலர்களில் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும்.

மீதமுள்ள 3 பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை போலவே மீதமுள்ள 3 மாடல்களும் பிளிப்கார்ட், க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9 Pro Fold Launched in India Price Specifications Sale From August 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X