சுந்தர்னா சும்மாவா.. ரூ.5000, ரூ.6000 இல்ல ரூ.23000 டிஸ்கவுண்ட்.. ஆபர் விலையில் Google Pixel 9 Pro Fold SALE!
Google Pixel 9 Pro Fold: உலகளவில் கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருந்தாலும் கூட, இந்திய சந்தையை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) தான், இந்தியாவிற்கு வரும் கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகும். இதனுடன் சேர்த்து கூகுள் நிறுவனம் தனது 3 புதிய பிக்சல் 9 சீரிஸ் (பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்) மாடல்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது.
அவைகளில் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல்களின் இந்திய விற்பனை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடங்கின. இதற்கிடையில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல் தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்ன்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Google Pixel 9 Pro Fold-ன் விலை, சலுகைகள் மற்றும் விற்பனை விவரங்கள்: இது இன்று (செப்டம்பர் 4) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக இந்திய விற்பனையை தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் அசல் அறிமுக விலை ரூ.1,72,999 ஆகும்.
ஆனால் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.10,000 உடனடி தள்ளுபடியை பெறலாம். கூடுதலாக பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.13,500 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இந்த சலுகைகளின் வழியாக பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.1,49,499 ஆக குறைக்க முடியும்; அதாவது முழுதாக ரூ.23,000 தள்ளுபடி கிடைக்கும்.
Google Pixel 9 Pro Fold-ன் அம்சங்கள்: இது டூயல் சிம் (Nano+eSIM) சப்போர்ட் உடன் ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. கூகுளின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 8 இன்ச் LTPO OLED சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளே (120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது. வெளிப்புறத்தில், 6.3 இன்ச் OLED ஆக்ச்சுவல் டிஸ்பிளே (120 Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறமாக, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/1.7 அபெர்ச்சர்) + 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.2 அபெர்ச்சர்) + 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம், மற்றும் எஃ ப்/3.1 அபெர்ச்சர்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளன.
கவர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனான 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் பிரத்யேகமான பல கேமரா மற்றும் எடிட்டிங் அம்சங்களும் உள்ளன. இதில் Add Me, Hands-free astrophotography, Face Unblur, Top Shot, Frequent Faces, Video Boost, Wind Noise Reduction, Audio Magic Eraser, Macro Focus Video, Made You Look மற்றும் Magic Editor ஆகியவைகளும் அடங்கும்.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4650 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இதை பிபிஎஸ் சார்ஜர் (45W) மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கிறது மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications