Home
Mobile

எந்த கிரெடிட் கார்டும் இல்லாம ரூ.53000 நேரடி விலை குறைப்பு! வரலாறு காணாத டிஸ்கவுண்ட்டில் லேட்டஸ்ட் Pixel போன்!

கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) மாடல் ஆனது "அறிமுகம் ஆனதிலுருந்து இவ்வளவு மலிவான விலைக்கு வாங்க கிடைத்ததே இல்லை" என்று கூறும் அளவிலான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ.1,19,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. அதாவது அசல் வெளியீட்டு விலையான ரூ.1,72,999 இருந்து நேரடியாக ரூ.53,000 விலை குறைப்பை பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை (Axis and SBI Credit Cards) பயன்படுத்துவதன் மூலம் ரூ.4,000 வரை தள்ளுபடியையும் பெறலாம்.

எந்த கிரெடிட் கார்டும் இல்லாம ரூ.53000 நேரடி விலை குறைப்பு!

இதன் பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை (Final Offer Price) ரூ.1,15,999 க்கு கொண்டுவர முடியும். இதோடு ரூ.61,900 எக்ஸ்சேன்ஜ் போனஸும் (Exchange Bonus) அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆனது அறிமுகம் ஆனதிலுருந்து இவ்வளவு மலிவான விலைக்கு வாங்க கிடைத்ததே இல்லை!

கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் விரிவான அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. மேலும் இது கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 8 இன்ச் LTPO OLED சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது. வெளிப்புறத்தில், 6.3 இன்ச் ஓஎல் இடி ஆக்ச்சுவல் டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை , பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில், வெளிப்புறமாக 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/1.7 அபெர்ச்சர்) + 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.2 அபெர்ச்சர்) + 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம், மற்றும் எஃ ப்/3.1 அபெர்ச்சர்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

இதன் வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளன. மேலும் கவர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனான 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் பிரத்யேகமான பல கேமரா மற்றும் எடிட்டிங் அம்சங்களும் உள்ளன. இதில் ஆட் மீ, ஹேண்ட் ப்ரீ ஆஸ்ட்ரோபோட்டோகிராஃபி, பேஸ் அன்பிளர், டாப் ஷாட், பிரெக்வென்ட் பேசஸ், வீடியோ பூஸ்ட், விண்ட் நாய்ஸ் ரிடெக்ஷன், ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ போகஸ் வீடியோ, மேட் யு லுக் மற்றும் மேஜிக் எடிட்டர் ஆகியவைகள் அடங்கும்.

பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4650mAh பேட்டரியை கொண்டுள்ளது, இதை பிபிஎஸ் சார்ஜர் (45W) மற்றும் க்யூஐ வயர்லெஸ் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கையும் கொண்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9 Pro Fold Gets Rs 53000 Price Cut Rs 4000 Bank Discount in Flipkart See Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X