Home
Mobile

பிளிப்கார்ட்டில் செம்ம டிமாண்ட்.. முழுசா ரூ.43,000 விலை குறைப்பு.. Google-ன் டபுள் டிஸ்பிளே போன் மீது!

கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆக பிக்சல் ப்ரோ 10 போல்ட் (Pixel 10 Pro Fold) மாடல் (நேற்று, ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில்) அறிமுகமான வேகத்தில், கடந்த ஆண்டு அறிமுகமான கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் (Pixel 9 Pro Fold) மீது அபாரமான விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart), கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.43,000 தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் விலை நிர்ணயம் ரூ.1,72,999 ஆக இருந்தது.

முழுசா ரூ.43,000 விலை குறைப்பு.. Google-ன் டபுள் டிஸ்பிளே போன் மீது!

தற்போது பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.33,000 நேரடி தள்ளுபடி (Direct Discount) கிடைக்கிறது. இதன் மூலம் இது கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனின் விலையை ரூ.1,29,999 ஆக குறைக்கிறது. மேலும் எச்டிஎப்சி (HDFC) வங்கி கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடியை பெறலாம் (மொத்தம் ரூ.43,000 டிஸ்கவுண்ட்) அல்லது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை ரூ.55,850 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் எக்ஸ்சேன்ஜூம் செய்யலாம்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (Pixel 10 Pro Fold Price in India) என்ன? இந்தியாவில், பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீ மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை ரூ. 1,72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Pixel 9 Pro Fold Full Specifications): இது டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவுடன் வருகிறது. கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை 8-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளேவை (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், 6.3 இன்ச் ஓஎல்இடி ஆக்ச்சுவல் டிஸ்பிளேவை (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறமாக 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/1.7 அபெர்ச்சர்) + 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.2 அபெர்ச்சர்) + 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம், மற்றும் எஃ ப்/3.1 அபெர்ச்சர்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

இதன் வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளன. மேலும் கவர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனான 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4650 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இதை பிபிஎஸ் சார்ஜர் (45W) மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஃபேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கிறது மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9 Pro Fold Gets Big Price Cut Discount in Flipkart After Pixel 10 Pro Fold launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X