சத்தமின்றி Google பிக்சல் போனின் விலை குறைப்பு.. 50எம்பி கேமரா.. ஐபி68 ரேட்டிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சமீபத்தில் தான் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூகுள் பிக்சல் 9 போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ரூ.79,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.57,680 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இன்னும் குறைவான விலை இந்த போனை வாங்கிவிட முடியும்.

கூகுள் பிக்சல் 9 அம்சங்கள் (Google Pixel 9 Specifications): 6.3 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 9 போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2424 பிக்சல்கள், 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
கூகுள் நிறுவனத்தின் தரமான கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் வசதியுடன் இந்த பிக்சல் 9 போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்செட் வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்.
50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா + 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 9 போன் வெளியானது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10.5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
சாம்சங் ஜிஎன்கே சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி, எல்டிஏஎப் ஆட்டோ போகஸ், சினிமாடிக் பிளர், 4K வீடியோ ரெக்கார்டிங், 8K ஜூமிங் சப்போர்ட் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் உடன் இந்த கூகுள் பிக்சல் போன் வெளிவந்தது. எனவே இந்த போன் மூலம் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்ய முடியும்.
4700mAh பேட்டரி வசதியுடன் கூகுள் பிக்சல் 9 வெளிவந்தது. குறிப்பாக இந்த போன் நாள் முழவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த பிக்சல் 9 போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications