இறங்கி அடிச்ச Google.. Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL.. மூன்றுமே இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?
எதிர்பார்த்தபடியே மேட் பை கூகுள் 2024 நிகழ்வில் (Made By Google Event 2024) பிக்சல் 9 சீரிஸின் கீழ் மொத்தம் 4 ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன: பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL), பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold). சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த 4 புதிய ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இதில் ஏதாவது 2 மாடல்கள் மட்டுமே இந்திய சந்தைக்கு வரும் என்கிற யூகங்கள் இருந்தன. தற்போது அந்த யூகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. சரி இந்த தொகுப்பில் பிக்சல் 9 சீரிஸின் கீழ் வெளியான முதல் 3 மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்கிற விவரங்களை பார்ப்போம்:

பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன.
பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் உள்ள அதே சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளன. வேறுபாடுகளை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ 6.3-இன்ச் Super Actua (LTPO) OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள பிக்சல் 9 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது இருப்பதிலேயே பெரிய 6.8-இன்ச் SuperActua (LTPO) OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளன: 50எம்பி Octa PD வைட் கேமரா + 48எம்பி Quad PD அல்ட்ரா வைட் கேமரா + (30எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48எம்பி Quad PD டெலிபோட்டோ கேமரா.
முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 42எம்பி டூயல் பிடி செல்பீ கேமராவை கொண்டுள்ளன. ப்ரோ மாடல்கள் 30fps வேகத்தில் 8கே வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். இரண்டுமே IP68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன. பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஆனது 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, அதே சமயம் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஆனது சற்றே பெரிய 5,060எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இரண்டுமே 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi சார்ஜர்கள் மூலம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.
இந்தியாவில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Peony, Porcelain, Obsidian மற்றும் Wintergreen கலர்களில் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனில் 128ஜிபி வேரியண்ட் இருந்தாலும், அது இந்தியாவில் விற்கப்படாது.
அடுத்ததாக உள்ள பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ப்ரோ மாடல்களுமே Hazel, Porcelain, Rose Quartz மற்றும் Obsidian ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். மேற்கண்ட 3 மாடல்களுமே பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








