Google பிக்சல் 9 போனை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம் இதுதான்.. எவ்வளவு விலை குறைப்பு?
கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) போனை தற்போது சற்று கம்மி விலையில் வாங்க முடியும். இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 9 போனுக்கு 8 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.72,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.68999 விலையில் வாங்கிவிட முடியும்.

கூகுள் பிக்சல் 9 அம்சங்கள் (Google Pixel 9 specifications): இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.
அதேபோல் டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். மேலும் இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4K வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.

அதேசமயம் இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கூகுள் போனில் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








