Home
Mobile

ரூ.4,000 ஆஃபரில் Pixel 9 போன்.. 4700mAh பேட்டரி.. 27W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. என்ன விலை?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் ரூ.2,000 அல்லது ரூ.3,000 டிஸ்கவுண்ட் கொடுக்கும் நேரத்தில் பிக்சல் மாடல்களுக்கு ரூ.4,000 வரையில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிக்சல் 9 மாடலுக்கும் கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் அறிமுகமான போது, கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியுடன் கூடிய மாடலின் விலை ரூ.79,999 ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் அதே விலைக்கு கிடைக்கிறது. ஆனால், தகுதியான பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ரூ.4,000 ஆஃபரில் Pixel 9 போன்.. 4700mAh  பேட்டரி.. 27W சார்ஜிங்!

இந்த டிஸ்கவுண்ட்டை பெற்றால், ரூ.75,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பெயோனி (Peony), விண்டர் கிரீன் (Wintergreen), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். இதில் சில கலர்களுக்கு எக்ஸ்பிரஸ் டெலிவரி கிடைக்கிறது. ஆகவே, பின் கோட்களுக்கு ஏற்ப 1 நாளில் வாங்கி கொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 9 முக்கிய அம்சங்கள்: எப்/1.68 அபெர்சர், சாம்சங் ஜிஎன்கே சென்சார், ஓஐஎஸ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எல்டிஏஎப் போகஸ் உடன் 50 எம்பி பிரைமரி கேமரா + எப்/1.68 அபெர்சர், 125 டிகிரி வைடு, சாம்சங் ஜிஎன்2 சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + எப்/1.7 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சாருடன் மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது.

10 பிட் எச்டிஆர் ரெக்கார்டிங், சினிமேட்டிக் பிளர் மற்றும் 8K ஜூம் கிடைக்கிறது. முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்சர், சாம்சங் 3ஜே1 சென்சார், 4K ரெக்கார்டிங்குடன் 10.5 எம்பி கேமரா கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் டிஸ்பிளே கிடைக்கிறது. 1080 x 2424 பிக்சல்களுடன் 6.3 இன்ச் அமோலெட் பேனல் கிடைக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டிஸ்பிளே அனுபவத்தை இந்த பிக்சல் மாடலும் கொடுக்கும். கூகுள் டென்சார் ஜி4 ப்ராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமே கிடைக்கும். ஆனால், 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுவதால், லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டில் கிடைத்துவிடும். 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்களையும் இந்த கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பிரீமியமாக இருப்பதால், ஈசிம் சப்போர்ட் கொண்டுள்ளது.

15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 4700mAh பேட்டரி உள்ளது. ஆனால், ஸ்லிம் மாடலாக இருக்கவில்லை. 8.5 எம்எம் தடிமன் மற்றும் 198 கிராம் எடை உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ உள்ளது.

பிரீமியம் டியூரபிலிட்டி ரேட்டிங் கிடைக்கவில்லை. இருப்பினும், IP68 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.3 கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களையே இந்த கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 9 gets Rs 4000 Bank Discount in Flipkart Now Selling At Rs 75999 instead of Rs 79999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X