சுந்தர் ஆட்டம் ஆரம்பம்.. வெறும் ரூ.6,667 நோ-காஸ்ட் EMI உடன் Google Pixel 9, Pixel 9 Pro XL விற்பனை ஆரம்பம்!
Google Pixel 9 Series First Sale: கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடந்த நிகழ்வில், கூகுள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிக்சல் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 9 சீரிஸை உலகளவில் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் ஆகின.
அவைகளில் 2 மாடல்கள் இன்று முதல் இந்திய விற்பனையை தொடங்குகின்றன - வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9 மற்றும் பெரிய அளவிலான டிஸ்பிளேவை கொண்ட பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல். இவ்விரு ஸ்மார்போன்களின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:

கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் மீதான விற்பனை சலுகைகள்: இந்தியாவில் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது Peony, Porcelain, Obsidian மற்றும் Wintergreen கலர்களில் பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக வாங்க கிடைக்கும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி அட்டையை பயன்படுத்தினால் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம், இதன் மூலம் பிக்சல் 9-ன் விலையை ரூ.75,999 ஆக குறைக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவைஸ்ளை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். இதுதவிர்த்து மாதத்திற்கு ரூ.6,667 க்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் மீதான விற்பனை சலுகைகள்: இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது Hazel, Porcelain, Rose Quartz மற்றும் Obsidian கலர்களில் பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக வாங்க கிடைக்கும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி அட்டையை பயன்படுத்தினால் ரூ.10,000 தள்ளுபடி பெறலாம், இதன் மூலம் பிக்சல் 9-ன் விலையை ரூ.1,14,999 ஆக குறைக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவைஸ்ளை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். இதுதவிர்த்து மாதத்திற்கு ரூ.10,417 க்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது.
பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன.
பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் உள்ள அதே சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளன. இது இருப்பதிலேயே பெரிய 6.8-இன்ச் SuperActua (LTPO) OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது: 50எம்பி Octa PD வைட் கேமரா + 48எம்பி Quad PD அல்ட்ரா வைட் கேமரா + (30எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48எம்பி Quad PD டெலிபோட்டோ கேமரா.
முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 42எம்பி டூயல் பிடி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. IP68 ரேட்டிங் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பெரிய 5,060எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. கூடவே 5W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi சார்ஜர்கள் மூலம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








