பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ரூ.15,000 ரேட் கட்.. 64MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 4492mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையில் (Flipkart Freedom Sale) கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையில் இருந்து ரூ.15,000 கம்மியான வாங்கி கொள்ளலாம். இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனை நடக்கிறது. இதில் ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் பிரீமியம் பீச்சர்களை கொண்ட கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மாட்போன் மீதான டிஸ்கவுண்ட் கவனம் பெற்றுள்ளது.

மார்கெட் விலையை பார்க்கையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.52,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.59,999 பட்ஜெட்டிலும் இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையில் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.37,999ஆகவும், 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.44,999ஆகவும் இருக்கிறது.
ரூ.15,000 நேரடி விலை குறைப்பில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்கின் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,749 பட்ஜெட்டில் இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும், பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
இதுவொரு பிரீமியம் மாடலாக இருப்பதால், குவாலிட்டி பக்காவாக இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது. பிங்கர்-பிரிண்ட் ரெசிஸ்டன்ட் கோட்டிங் (Fingerprint-resistant Coating), மேட் அலுமினியம் ஃபிரேம் (Matte Aluminium Frame) கிடைக்கிறது. அலோய் (Aloe), பே (Bay), போர்ஸ்லைன் (Porcelain), அப்சிடியன் (Obsidian) கலர்கள் உள்ளது.
இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனுக்கு 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஜெனரேஷன் அப்டேட், செக்யூரிட்டி அப்டேட் மற்றும் பீச்சர் டிராப் அப்டேட் கிடைக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும், இந்த போனின் யுஐ எப்போதும் அப்கிரேடில் இருக்கும். இப்போது, டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கிடைக்கிறது. டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் மற்றும் eSIM சப்போர்ட் கிடைக்கிறது. 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 430 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4492mAh பேட்டரி கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி, குவாட் பிடி, குவாட் பயர் சப்போர்ட் உள்ளது. IP67 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications








