வீண் போகல சார்.. Pixel போனுக்கு அடிச்சது லக்கு.. ரூ.18,000 ரேட் கட்ல கிடைச்சா யாருங்க விடுவா.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இதனால், ஏற்கனவே வெளியானா கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போனின் 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.18,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அந்த போனில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 8ஏ பிளிப்கார்ட் விலை (Google Pixel 8a Flipkart Price): இந்த பிக்சல் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.44,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,000 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோக ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.18,000 விலை குறைப்பில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இதேபோல ரூ.52,999 பட்ஜெட்டில் வெளியான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இப்போது ரூ.37,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கும் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த மாடலையும் ரூ.18,000 டிஸ்கவுண்ட் விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): பிரீமியம் செக்மெண்ட் போன்களில் எந்த மாடல்களிலும் கிடைக்காதபடி இந்த பிக்சல் போனுக்கு 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. இப்போது, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது.
பிரீமியம் பீச்சர்கள் மற்றும் அவுட்புட் கொடுக்கும் கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் மூலம் மேஜிக் எரைசர் (Magic Eraser), நைட் சைட் (Night Sight), போட்டோ அன்பிளர் (Photo Unblur), பெஸ்ட் டேக் (Best Take) மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளேவில் ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருக்கிறது.
ஆகவே, இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எச்டிஆர் (HDR) டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 430 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வருகிறது.
மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. 64 எம்பி குவாட் பிடி வைடு மெயின் கேமரா + 13 அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் 8X சூப்பர் ரெஸ் ஜூமிங் (Super Res Zooming), 1X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல்/எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical/Electronic Image Stabilization) டெக்னாலஜி கொடுக்கிறது.
இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங், 5X டிஜிட்டல் ஜூமிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 4492mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








