Home
Mobile

மே 14 வரை பொறுங்க.. 64MP கேமரா.. ஜி3.. OLED டிஸ்பிளே.. பிக்சல் போன் ரெடி.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் தனது I/O 2024 நிகழ்வை வரும் மே 14-ம் தேதி நடத்துகிறது. இந்த நிகழ்வின் கூகுள் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் முக்கியமான தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த கூகுள் நிகழ்வில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மே 14 வரை பொறுங்க.. 64MP கேமரா.. பிக்சல் போன் ரெடி.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் ( Google Pixel 8A specifications): 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (full-HD+ OLED display) வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த டென்சார் ஜி3 சிப்செட் (Tensor G3 chipset) வசதியை அடிப்படையாக கொண்டு இந்த பிக்சல் 8ஏ வெளிவரும். இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் இந்த ஜி3 சிப்செட் FOPLP (ஃபேன்-அவுட் பேனல் லெவல் பேக்கேஜிங்) என்ற சிறப்பான தொழில்நுட்ப அம்சத்தைக் கொண்டுள்ளது.

மே 14 வரை பொறுங்க.. 64MP கேமரா.. பிக்சல் போன் ரெடி.. எந்த மாடல்?

OIS ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 8ஏ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜிங் செய்ய 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த கூகுள் பிக்சல் 8ஏ போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.4 போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 வரை பொறுங்க.. 64MP கேமரா.. பிக்சல் போன் ரெடி.. எந்த மாடல்?

குறிப்பாக தற்போது வெளியான தகவலின்படி இந்த புதிய கூகுள் பிக்சல் 8ஏ போன் ஆனது ரூ.41,648 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இதில் இருக்கும். அதேபோல் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கூகுள் பிக்சல் 8ஏ போன்.

இதுதவிர கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8A price has been released before the May 14 launch event: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X