புதுச அப்படியே ஓரங்கட்டுங்க.. 1 ஆண்டு பழைய Google Pixel மாடல் மீது ரூ.13,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?
மிகவும் சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் 9 சீரிஸின் (Google Pixel 9 Series) 4 புதிய ஸ்மார்ட்போன்களுமே உங்களுடைய பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றால், தற்போது மிகப்பெரிய தள்ளுபடியை பெற்றுள்ள கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) மாடலை கருத்தில் கொள்ளலாம். பிக்சல் 9 சீரீஸ் அறிமுகத்தை தொடர்ந்து பழைய பிக்சல் மாடல்களின் மீது அதிகாரப்பூர்வ விலை குறைப்புகள் மற்றும் மாபெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது பிக்சல் 8ஏ மீது மாபெரும் பிளாட் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது.
கடந்த மே 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது அமேசான் வலைத்தளத்தில் ரூ.59,999 க்கு பதிலாக 22 சதவீத நேரடி தள்ளுபடிக்கு பிறகு ரூ.46,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அமேசானின் இந்த பிளாட் டிஸ்கவுண்ட்டின் கீழ் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் மீது ரூ.13,000 விலை குறைப்பு கிடைக்கிறது.

இந்த நேரடி தள்ளுபடி தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மீது ரூ.1,250 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். கூடுதலாக, பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கக்கூடிய ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழங்குகிறது. இது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை மற்றும் மதிப்பைப் பொறுத்து ரூ.41,250 வரையிலான போனஸை வழங்கும்.
முன்னதாக அறிமுகமான பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Peony, Porcelain, Obsidian மற்றும் Wintergreen கலர்களில் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனில் 128ஜிபி வேரியண்ட் இருந்தாலும், அது இந்தியாவில் விற்கப்படாது.
அடுத்ததாக உள்ள பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ப்ரோ மாடல்களுமே Hazel, Porcelain, Rose Quartz மற்றும் Obsidian ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.
கடைசியாக உள்ள பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Obsidian மற்றும் Porcelain கலர்களில் வாங்க கிடைக்கும். மேற்கண்ட 4 மாடல்களுமே பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும்.
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








