சுந்தர் சார் நீங்களுமா.. புதுசு வருதுன்னு பழைய Google போன் மீது பலே Price Cut.. எந்த மாடல்?
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிக்சல் 9 சீரீஸை (Pixel 9 Series) அறிமுகம் செய்த பிறகு, கூகுள் (Google) நிறுவனமானது அதே சீரீஸின் கீழ் வரும் பட்ஜெட் விலை மாடல் ஆன பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட இது வருகிற மார்ச் 19 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் (அல்லது ப்ரீஆர்டர் தொடங்கும்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புதிய மாடலின் வருகையையொட்டி சற்றே பழைய பிக்சல் 8ஏ மாடலானது, அட்டகாசமான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அறிமுகத்தின் போது கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.52999 ஆகும். இருப்பினும் தற்போது இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.37999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் மீது 28% விலை குறைப்பை அறிவித்துள்ளது. கூடவே பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளையும் வழங்குகிறது.
பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை வாங்க எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் அல்லது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். வங்கி சலுகைகள் தவிர, நல்ல நிலையில் உள்ள பிக்சல் 6ஏ மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.13000 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.35000 க்கு கீழ் கொண்டுவர முடியும்.
கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பழைய பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40 சதவீதம் பிரைட் ஆக இருப்பதாக கூகுள் கூறுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட்-இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினையும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும் மற்றும் செய்ய உதவும்.
பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் பேட்டரியைப் பொறுத்தவரை இது 4492mAh பேட்டரியுடன் வருகிறது. கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். சுவாரசியமாக கூகுள் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில், இலவசமாக சார்ஜரையும் சேர்த்து அனுப்புகிறது.
முன்னதாக ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையானது, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனிற்கான இலவசங்களை விவரித்துள்ளது. அதன்படி இந்த கூகுள் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச ஃபிட்பிட் பிரீமியம் சந்தா, மூன்று மாதங்களுக்கு இலவச யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) சந்தா மற்றும் 100ஜிபி கூகுள் ஒன் (100GB Google One) சந்தா கிடைக்கும்.
இதே அறிக்கை, கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஜெமினை அட்வான்ஸ்டு அம்சங்கள் கிடைக்காது என்றும், இதற்காக அவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி பிக்சல் 9 மாடலுக்கான ப்ரீ-ஆர்டர் மார்ச் 19 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications