Home
Mobile

ரூ.15000 டிஸ்கவுண்ட் கொடுத்தா யாரு விடுவா.. ஏப்.16 முதல் Pixel 9a விற்பனைக்கு முன் இப்படி ஒரு ஆபரா! வாங்கலாமா?

ஆப்பிளின் ஐபோன் 16இ மாடலுக்கு கடும் போட்டியாக பார்க்கப்படும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பழைய பிக்சல் 8ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போன் மீது மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்து அதை ஆபர் விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

ஏற்கனவே ஐபோன் 16இ மாடலை வாங்குவதா அல்லது பிக்சல் 9ஏ மாடலை வாங்குவதா என்கிற கேள்விகளும், அதற்கான பதில்களும் அதிகம் தேடப்பட்டு வரும் நிலையில்..பிக்சல் 8ஏ மீதான இந்த திடீர் ஆபர் - ஏப்ரல் 16 ஆம் தேதிக்காக காத்திருக்கும் பலரையும் மேலும் குழப்பம் அடைய செய்துள்ளது.

ரூ.15000 டிஸ்கவுண்ட் கொடுத்தா யாரு விடுவா!

கூகுள் பிக்சல் 8ஏ மீது அப்படி ஆபர் அறிவிக்கப்பட்டு உள்ளது? ஆப்பிள் ஐபோன் 16இ VS ஐபோன் பிக்சல் 9ஏ - எதை வாங்கலாம்? கூகுள் பிக்சல் 9ஏ மாடலுக்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? இதோ விவரங்கள்:

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 28% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் அசல் விலையான ரூ.52,999 க்கு பதிலாக ரூ.37,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. கண்டிப்பாக இது லேட்டஸ்ட் அம்சங்களுடன் வரும் பிக்சல் 9ஏ மாடலுக்கு போட்டி ஆகாது. பட்ஜெட்டை கருத்தில் கொண்டு வேண்டுமானால் இதை வாங்கலாம்!

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும். இது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 16இ VS பிக்சல் 9ஏ - இந்த 2 மாடல்களில் எதை வாங்கலாம்? அப்படி இப்படி.. அது இது.. என்று கதை அடிக்காமல் நேரடியாக விஷயத்திற்குள் வர வேண்டும் என்றால்.. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9ஏ தான் வின்னர். "வாங்கணும்னு முடிவு செஞ்சிட்டா" ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16இ மாடலை விட பிக்சல் 9ஏ மாடலை தான் நம்பி தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள் இதோ:

01. நாட்ச் இல்லாத 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே: ஐபோன் 16இ மாடல் உடன், நீங்கள் இன்னும் நாட்ச்சை பெறுகிறீர்கள். 2020 க்கு முன்பும், அதன் பிறகும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் நீங்கள் பார்த்த அதே நாட்ச் டிசைனை ஐபோன் 16இ கொண்டுள்ளது. ரூ.59,900 க்கு ஆப்பிள் நிறுவனம் நாட்ச்சிற்கு பதிலாக டைனமிக் ஐலேண்டை வழங்கியிருக்க வேண்டும்.

மறுகையில் உள்ள பிக்சல் 9ஏ மாடலை பெரிய பெசல் அளவுடன் ஒப்பீட்டளவில் பெஸ்ட் ஆக உள்ளது. இது கூகுள் ஆக்டுவா டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது ஆப்பிள் ஐபோன் 16ஏ உடன் ஒப்பிடும்போது சிறந்த பீக் ப்ரைட்னஸ்-ஐ கொண்டுள்ளது மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் கூகுளின் டிஸ்பிளேவும் சற்று பெரியது - 6.1- இன்ச்!

02. கூகுளின் ஏஐ - ஆப்பிளுடன் ஒப்பிடும்போது சிறந்த நிலையில் உள்ளது! ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 வெர்ஷன்களுடன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களை படிப்படியாக வெளியிடுவதாக உறுதியளித்தது. ஆனால் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தால் ஒரு சில அம்சங்களை மட்டுமே வழங்க முடிந்தது. மிக முக்கியமாக, புதுப்பிக்கப்பட்ட சிரி போன்ற முக்கியமானவை இன்னும் பைப்லைனிலேயே உள்ளன. இந்த இடத்தில் கூகுள் வெளிப்படையாகவே - ஒரு படி அல்ல, பல மேலே நிற்கிறது.

03. கேமரா பன்முகத்தன்மை: நிச்சயமாக ஆப்பிளின் சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமரா, அவுட்புட்க்களை வழங்கும். இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களை பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. ஆனால் டீபால்ட் ஆக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும்

ஆனால் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது: 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா. ஐபோன் 16இ உடன் ஒப்பிடும்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் கேமராவில் அதிக பல்துறை திறன் உள்ளது. ஆக இந்த இடத்திலும் வெளிப்படையாகவே பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வகிக்கிறது.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்

- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்? முதல் ஆப்ஷன் - ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலாகும். இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அடுத்தது சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G) மாடலை வாங்கலாம்: தற்போது இது ரூ.59999 அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ரூ.44999 என்கிற ஆபர் விலையில் கிடைக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை வாங்கலாம் இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8a Gets Discount Ahead Pixel 9a India Sale on April 16 Which one to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X