Home
Mobile

பரபரப்பை கிளப்பிய Flipkart-ன் புது Sale.. இந்த Google Pixel போன் மீது ரூ.15,000 நேரடி டிஸ்கவுண்ட்!

அமேசானின் கிரேட் சம்மர் சேலுக்கு (Amazon Great Summer Sale 2025) போட்டியாக பிளிப்கார்ட்டும், அதன் வலைத்தளத்தில் ஒரு சிறப்பு விற்பனையை (Flipkart New Sale 2025) நடத்துகிறது. அதில் சற்றே பழைய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.15,000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான பிக்சல் 9ஏ (Google Pixel 9a) மாடலுக்கு முன்னர் அறிமுகமான மாடல் ஆகும். தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.52,999 க்கு பதிலாக 28% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்த Google Pixel போன் மீது ரூ.15,000 நேரடி டிஸ்கவுண்ட்!

கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Pixel 8a Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40 சதவீதம் பிரகாசமாக இருப்பதாக கூகுள் கூறுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை, இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இது 4492mAh பேட்டரியுடன் வருகிறது.

புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Pixel 9a Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்

- 48 மெகாபிக்சல் + 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்
- 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Pixel 9a Price and Free Offers): இந்தியாவில் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஐரிஸ், அப்சிடியன் மற்றும் போர்சிலேன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனும் 3 இலவச சேவைகளும் / சந்தாக்களும் கிடைக்கும்:
1. மூன்று மாத கூகுள் ஒன் சந்தா
2. மூன்று மாத யூட்யூப் பிரீமியம் சந்தா
3. ஆறு மாத ஃபிட்பிட் பிரீமியம் சந்தா

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8a available to buy under Rs 40000 in Flipkart New Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X