Home
Mobile

தெறிக்குது ஆர்டர்.. முழுசா ரூ.11000 கட்.. SONY கேமரா.. 8X ஜூமிங்.. 8GB ரேம்.. பிச்சிக்குது பிக்சல் 8 சேல்!

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) போனின் விற்பனை படுஜோராக தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.11,000 டிஸ்கவுண்டுடன் அசத்துகிறது. இந்த கூகுள் பிக்சல் மாடலின் முழு அம்சங்கள், விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் இதோ.

கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த கூகுள் பிக்சல் மாடலில் 6.17 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

முழுசா ரூ.11000 கட்.. SONY கேமரா.. 8X ஜூமிங்.. பிச்சிக்குது சேல்!

அதோடு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் வருகிறது.

இந்த ஓஎஸ் 7 வருடத்துக்கான அப்டேட்டுடன் கொடுக்கப்படுகிறது. மேலும், டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதற்கு சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சாருடன் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்சனும் வருகிறது.

அதோடு எச்டிஆர் ரெக்கார்டிங் (HDR Recording), சினிமாடிக் பிளர் (Cinematic Blur), 8X ஜூமிங் மற்றும் 4K 60 fps ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதற்கு சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூகுள் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Scanner) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் உள்ளது. இந்த மாடலில் 4,575mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 12W வயர்டு சார்ஜிங் மற்றும் 18W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது. 5ஜி, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த கூகுள் பிக்சல் 8 மாடலில் அப்சிடியன் (Obsidian), ஹசல் (Hazel) மற்றும் ரோஸ் (Rose) ஆகிய 3 கலர்கள் கிடைக்கின்றன.

இந்த போனின் 128 ஜிபி மாடலின் ரூ.75,999ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.82,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 12) முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனுக்கு பிரம்மாண்ட அறிமுக சலுகையும் கிடைக்கிறது. இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த போனை ஆர்டர் செய்யும் போது, ஐசிஐசிஐ (ICICI), கோடக் மகேந்திரா (Kotak Mahindra), ஆக்சிஸ் (Axis) ஆகிய வங்களின் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்தினால், ரூ.8000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதே போல ரூ.3000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது.

இந்த ஆஃபர்களை பெற்றால், கூகுள் பிக்சல் 8 மாடலை வெறும் ரூ.64,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆப்பிள் போன்களுக்கு நிகரான அம்சங்களுடன் மற்றொரு பிராண்ட் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கூகுள் பிக்சல் 8 மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 With Tensor G3 Chip, 50MP Camera Goes Sale on Flipkart in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X