Home
Mobile

அசூரன் கம்மிங்.. அக்.4இல் மார்கெட் மிரளும்.. SONY கேமரா.. 12GB ரேம்.. 4950mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த உலக எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 4ஆம் தேதி கூலாக வருகிறது, கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) மாடல். இவ்வளவு பில்ட்-அப் கொடுக்கும் அளவுக்கு அப்படியென்ன அதிலிருக்கிறது? அதன் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதோ.

ஆப்பிள் (Apple) போன்களுக்கு நிகரான இடத்தை பிடிக்க எத்தனையோ நிறுவனங்கள் போட்டிப்போட்டும், அதனுடைய மாடல்களுக்கு அடுத்த இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. இரண்டாவது, இடத்தில் இருக்கும் சாம்சங் (Samsung) நிறுவனம் கிட்டத்தட்ட முதல் இடத்தை நெருங்கி வரும் வேளையில், அந்த இடத்துக்கு பிரம்மாண்ட போட்டியாளராக கூகுள் (Google) நிறுவனம் வந்து விட்டது.

அக்.4இல் மார்கெட் மிரளும்.. SONY கேமரா.. 12GB ரேம்.. 4950mAh பேட்டரி!

கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த பிக்சல் போன் 6.17 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது. அதோடு கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சாருடன் கூடிய 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த கூகுள் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் இருக்கிறது. இதில் 12W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4485mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பிளாக் (Black), யெல்லோ (Yellow) மற்றும் லைட் ப்ளூ (Light Blue) ஆகிய 3 கலர்கள் உள்ளன. இந்த கூகுள் பிக்சல் 8 மாடலின் ஆரம்ப விலை ரூ.65,000 முதல் ரூ. 70,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த போனிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் வருகிறது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் இருக்கிறது.

அந்த வகையில், சாம்சங் ஜிஎன்2 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்787 சென்சார் கொண்ட 64 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மேலும் 48 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதேபோல சாம்சங் சென்சார் கொண்ட 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளன. இந்த பிக்சல் போனில் 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4950mAh பேட்டரி வருகிறது.

இந்த கூகுள் பிக்சல் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.90,000 முதல் ரூ.95,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம். இந்த போன் வைட் (White), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த அம்சங்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல, கசிந்தவை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 With Tensor G3 Chip, 12MP Camera Launch on October 4 Specifications Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X