Home
Mobile

புது போன் வாங்குற பிளான் இருந்தா கொஞ்சம் நாளைக்கு ஓரம் கட்டி வைங்க.. வருகிறது தரமான Google போன்.!

கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 8 போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய கூகுள் போன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சாருடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இணையதளத்தில் வெளியான கூகுள் பிக்சல் 8 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புது போன் வாங்குற பிளான் இருந்தா கொஞ்சம் நாளைக்கு ஓரம் கட்டி வைங்க.!

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1400-நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் வைஃபை 7 ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேமிங், வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ஜிஎன்2 மெயின் கேமரா + 12எம்பி ஐஎம்எக்ஸ்386 அல்ட்ரா வைடு லென்ஸ் + ToF கேமரா சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11எம்பி கேமராவுடன் இந்த புதிய கூகுள் போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் UFS 4.0 ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். எனவே இந்த போனுக்கு கண்டிப்பாக அதிக வரவேற்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது போன் வாங்குற பிளான் இருந்தா கொஞ்சம் நாளைக்கு ஓரம் கட்டி வைங்க.!

இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4485 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 12 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

வைஃபை 7, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன். பின்பு கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனை விட சற்று உயர்வான விலையில் வெளிவரும் இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 will be launched in October: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X