Home
Mobile

அரளவிட்ட அசூரன்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. SONY கேமரா.. QHD+ டிஸ்பிளே.. 5050mAh பேட்டரி.. எந்த மாடல்?

உலகமே எதிர்பார்த்த கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. சோனி சென்சார் கேமரா, 10X டிஜிட்டல் ஜூமிங், ஆண்ட்ராய்டு 14 போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கின்றன. இவற்றின் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ.

கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த பிக்சல் போன் 6.17 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

 SONY கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5050mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த போனில் சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சார் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ ஆப்சன், எச்டிஆர் ரெக்கார்டிங், சினிமாடிக் பிளர் (Cinematic Blur) சப்போர்ட் வருகிறது. அதேபோல 8X ஜூமிங் மற்றும் 4K 60 fps ரெக்கார்டிங் சப்போர்ட்டும் உள்ளது.

இந்த போனில் 7 வருடத்துக்கான அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது. இந்த கூகுள் பிக்சல் மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் உடன் 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் பேஸ் அன்லாக் சப்போர்ட் வருகிறது. இதில் 12W வயர்டு சார்ஜிங் மற்றும் 18W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,575mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனானது, அப்சிடியன் (Obsidian), ஹசல் (Hazel) மற்றும் ரோஸ் (Rose) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 8 போனின் 128 ஜிபி மாடலின் ரூ.75,999ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.82,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த போனில் 6.7 இன்ச் (2,992 x 1,344 பிக்சல்கள்) கியூஎச்டி+ (QHD+) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த போனிலும் பிக்சல் 8 மாடலில் வரும் சிப்செட் மற்றும் ஓஎஸ் வருகிறது. ஆனால், இந்த ப்ரோ மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஜிஎன்2 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்787 சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சாம்சங் ஜிஎம்5 சென்டாருடன் 48 எம்பி மேக்ரோ சென்சார் கேமரா வருகிறது.

இதில் கூடுதலாக 5X ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. சாம்சங் 3ஜே1 சென்சாருடன் 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய 4 வேரியண்ட்கள் உள்ளன.

இந்த கூகுள் பிக்சல் ப்ரோ போனில் 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 23W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,050mAh பேட்டரி வருகிறது. இந்த போன் அப்சிடியன் மற்றும் பே (Bay) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.1,06,999 பட்ஜெட்டில் தொடங்குகிறது. இந்த போனின் ப்ரீ-ஆர்டர் பிளிப்கார்ட்டில் தொடங்கிவிட்டது.

வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல், இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதில் கூகுள் பிக்சல் 8 போனுக்கு ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் ரூ.8000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகிறது. அதேபோல கூகுள் பிக்சல் ப்ரோ மாடலுக்கு ரூ.4000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், ரூ.9000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர்களை பெற்றால், பிக்சல் 8 மாடலை ரூ.64,999க்கும், 8 ப்ரோ மாடலை ரூ.93,999க்கும் வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 Tensor G3, 50MP Camera Sale From October 12 on Flipkart in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X