Home
Mobile

மிரளுது கேமரா.. ரூ.9,000 டிஸ்கவுண்ட்.. SAMSUNG சென்சார்.. 30X ஜூமிங்.. 4K ரெக்கார்டிங்.. எந்த மாடல்?

ஆப்பிள் போன்களுக்கு நிகரான கேமரா அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. முழுசாக ரூ.9000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த ப்ரோ மாடலானது, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரளுது கேமரா.. SAMSUNG சென்சார்.. 30X ஜூமிங்.. எந்த மாடல்?

இந்த மாடலுக்கு 7 வருடங்களுக்கான ஓஎஸ், செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்ஸ் கொடுக்கப்படுகிறது. இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ போனில் 6.7 இன்ச் (2,992 x 1,344 பிக்சல்கள்) கியூஎச்டி பிளஸ் (QHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. நானோ மற்றும் ஈசிம் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் பிரம்மாண்ட பேக் கேமரா சிஸ்டம் வருகிறது.

ஆகவே, சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சாம்சங் ஜிஎம்5 (Samsung GM5) சென்சார் கொண்ட 48 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இதுவொரு எல்டிஏஎப் (LDAF) கேமரா மாடலாகும்.

மிரளுது கேமரா.. SAMSUNG சென்சார்.. 30X ஜூமிங்.. எந்த மாடல்?

இந்த மெயின் கேமராவில் 5x ஜூமிங், 30x டிஜிட்டல் ஜூமிங், எச்டிஆர் ரெக்கார்டிங், சினிமாடிக் பிளர் மற்றும் 4K வீடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் கூடிய 10.8 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

அதோடு பேஸ் அன்லாக் (Face Unlock) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோ போனில் டெம்பரேச்சர் சென்சார் (Temperature Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது. அதேபோல டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,050mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 23W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அப்சிடியன் (Obsidian), ஹேசல் (Hazel) மற்றும் ரோஸ் (Rose) ஆகிய 3 கலர்கள் கொண்டுள்ளது.

இந்த போன் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் 1 ஜிபி மெமரி ஆகிய 4 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

மிரளுது கேமரா.. SAMSUNG சென்சார்.. 30X ஜூமிங்.. எந்த மாடல்?

இப்போது, 256 ஜிபி வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வாங்கிக்கொள்ளலாம். அப்சிடியன் கலரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.1,13,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.9000 டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.

Best Mobiles in India

English summary
Google Pixel 8 Pro With 256GB Storage Variant Sale on Flipkart in India Specifications Price Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X