அடிச்சிக்கவே முடியாது.. சாம்சங்கின் பெஸ்ட் கேமரா சென்சாருடன் களமிறங்கும் Google Pixel 8 Pro
கூகுள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வெளியாக இருக்கும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) சாம்சங் நிறுவனத்தின் ஐசோசெல் ஜிஎன்2 கேமரா சென்சாருடன் (Samsung ISOCELL GN2 Camera Sensor ) களமிறங்க உள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்த முழு தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
மிகப்பெரும் டெக் நிறுவனமான கூகுள் (Google) ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Premium Flagship Smartphone) வரிசையில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில், கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த போன் வெளியாகும் முன்பே அதன் அம்சங்கள் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. முக்கியமாக சாம்சங்கின் 50 எம்பி ஐசோசெல் ஜிஎன் 2 கேமரா சென்சாருடன் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சாம்சங் 50 எம்பி ஐசோசெல் ஜிஎன் 2 கேமரா சென்சாரில் என்ன இருக்கிறது?: இந்த சென்சார் சாம்சங் நிறுவனத்தின் டாப் கேமரா சென்சார்களில் ஒன்றாகும். இந்த சென்சார் மூலம் ஆப்பிள் ஐபோன்களின் கேமரா சென்சார்களுக்கு இணையான குவாலிட்டியான போட்டோக்களை எடுக்க முடியும். குறிப்பாக, நைட் எஃபெக்ட் (Night Effect) போட்டோக்களை தெளிவாகவும், துல்லியமாகவும் எடுத்து விட முடியும்.
அதுமட்டுமல்லாம் ஐசோசெல் ஜிஎன் 2 சென்சார் 8K வீடியோக்களை 30fps அளவிலும், 4K வீடியோக்களை 120fps அளவிலும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. சொல்லப்போனால் சினிமா எஃபெக்ட்டில் வீடியோக்களை எடுத்துக் கொள்ள கூடிய வகையில் இருக்கும்.
அதேபோல ஸ்லோ-மோஷன் வீடியோக்களை கூட 480fps அளவில் Full HD வீடியோவாக பதிவு செய்து கொள்ளலாம். இதனாலேயே கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் டென்சார் ஜி3 எஸ்ஓசி (Google Tensor G3 SOC) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.73 இன்ச் குவாட் ஹை டெஃபினிஷன் (Quad High Definition) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதற்காக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. மொத்தமாக டிஸ்பிளே பொறுத்தவரையில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்ஷன் (Gorilla Glass Victus) உடன் வருகிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 64 எம்பி பிரைமரி கேமிரா, 48 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 12 எம்பி மேக்ரோ லென்ஸ் உடன் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமிரா உள்ளது.
5100 mAh பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் கூகுள் பிக்சல் 8 ப்ரோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியாவில் ரூ. 64,490 -க்கு விற்பனையாக வாய்ப்புள்ளது. ஆப்பிள் ஐபோனுக்கு இணையாக கேமரா வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த போனை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும்.


Click it and Unblock the Notifications