64MP அல்ட்ரா-வைட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை களத்தில் இறக்குகிறது Google.! என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய கூகுள் பிக்சல் 8 போன் ஆனது வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுள் பிக்சல் 8 ப்ரோ உடன் கூகுள் பிக்சல் 8 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இணையத்தில் வெளியான கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD+ பிளஸ் எல்டிஒபி ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டு அறிமுகமாகும். பின்பு 2960 x 1440 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த பிக்சல் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் உடன் இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போனில் பல்வேறு புதிய அம்சங்களும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
50எம்பி பிரைமரி சென்சார் + 64எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் இரவு நேரங்களிலும் கூட துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11எம்பி கேமராவுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் தரமான மென்பொருள் வசதி மற்றும் அருமையான கேமராக்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
4950எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








