Home
Mobile

மார்கெட் காலி.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. வருகிறது கூகுள் போன்.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் ஐபோன்களுக்கு போட்டியாக அசத்தலான பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் விரைவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது அக்டோபர் 4-ம் தேதி கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. வருகிறது கூகுள் போன்.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் வசதியுடன் இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சிப்செட் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனுக்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி ஆட்டோபோகஸ் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10.8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் ஃபேஸ் அன்லாக் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன்.

5050 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் பிக்சல் 8 ப்ரோ போன் நீண்ட் நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. வருகிறது கூகுள் போன்.. எந்த மாடல்?

வைஃபை 7, புளூடூத் வி5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐபி68 ரேட்டிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo courtesy: facebook/leaks viet Nam, gadgets360.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 Pro specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X