Home
Mobile

முழுசா ரூ.50,000 குறைப்பு.. 43 சதவீத ஆஃபரில் Pixel 8 Pro போன்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5050mAh பேட்டரி!

இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்கள் வெளியாகிவிட்டன. இதனால், ஏற்கனவே மார்கெட்டுக்கு வந்த பிக்சல் மாடல்களுக்கு அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) போனுக்கு கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி விலை குறைப்பு கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, சாம்சங் சென்சாருடன் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5,050mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் இந்த பிக்சல் மாடலின் விவரங்கள் இதோ.

ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால், வேறு ஆப்ஷனே இல்லாமல் கூகுள் பிக்சல் மாடல்களுக்கு செல்லலாம். அந்த அளவுக்கு அல்ட்ரா பிரீமியம் கேமரா, பில்ட் குவாலிட்டி மட்டுமல்லாமல், செக்யூரிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன. அதோடு ஏஐ பீச்சர்களிலும் தட்டித்தூக்கும்படி கிடைக்கின்றன.

முழுசா ரூ.50,000 குறைப்பு.. 43 சதவீத ஆஃபரில் Pixel 8 Pro போன் வருது!

இதற்கு ஏற்ப பிக்சல் ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், இப்போது கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை கிட்டத்தட்ட பாதி விலைக்கு வாங்கி கொள்ளும்படி ஆஃபர் வந்துள்ளது. அதாவது, இந்தியாவில் வெளியானபோது, இந்த பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,06,999ஆக இருந்தது.

இதையடுத்து கூகுள் பிக்சல் 9 ப்ரோ வெளியாகியதால், கொஞ்சம் விலை குறைப்பட்டது. இப்போது, கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனே வெளியாகிவிட்டதால், நம்ப முடியாதபடி ரூ,50,000 நேரடியாக விலைக்கு குறைப்பு கிடைக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.56,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இதற்கு கிரெடிட் கார்டுகளோ அல்லது டெபிட் கார்டுகளோ தேவையில்லை. ஒருவேளை உங்களிடம் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக ரூ.3,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ஆகவே, ரூ.53,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இப்படி மார்கெட் விலையில் இருந்து 43 சதவீத விலை குறைப்பில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

முழுசா ரூ.50,000 குறைப்பு.. 43 சதவீத ஆஃபரில் Pixel 8 Pro போன் வருது!

பழைய மாடலாக இருப்பதால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) தானே கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம், இதுவொரு பிரீமியம் மாடலாகும். ஆகவே, 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்கள் கிடைக்கும். ஆகவே, லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்கள் முதல் யுஐ பீச்சர்கள் வரையில் கிடைக்கும்.

அதேபோல குவாலிட்டியிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் கிளாஸ் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சனையும் கொடுக்கிறது. அப்சிடியன் (Obsidian) மற்றும் பே (Bay) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த பிக்சலில் 6.7 இன்ச் (2992 x 1344 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன்,120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. சாம்சங் சென்சாருடன் 50 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 10.8 செல்பீ கேமரா மற்றும் 5,050mAh பேட்டரி கிடைக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 23W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 Pro Gets Price Drop After Pixel 10 Series Launched in India Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X