Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.19000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்டில் Google பிக்சல் 8 மாடல்கள்.. பொளக்குது விற்பனை!

கூகுள் பிக்சல் (Google Pixel) பிரியர்கள் கனவிலும் நினைத்திராதபடி இதுவரையில் கிடைக்காத விலை குறைப்பு (Price Cut) மற்றும் டிஸ்கவுண்ட் உடன் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.1,06,999 பட்ஜெட்டில் வெளியான மாடலானது, இப்போது வெறும் ரூ.87,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இப்படி ரூ.49,999 பட்ஜெட்டிலும் பிக்சல் 8 மாடல்களை வாங்கி கொள்ள முடியும். இந்த போன்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் வெளியாகிவிட்டன. இதனால், ஏற்கனவே இருக்கும் கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 7 மாடல்களின் விலை சரமாரியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிகபட்சமாக ரூ.10000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. முதலில் விலை குறைப்பை தெரிந்துகொள்வோம்.

செய்கைனா இதுதான்.. ரூ.19000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்டில் பிக்சல்!

கூகுள் பிக்சல் 8 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,06,999ஆக இருந்தது. இப்போது, ரூ.7000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.99,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.1,13,999ஆக இருந்தது. இப்போது, ரூ.7000 விலை குறைக்கப்பட்டு, ரூ.1,06,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

கூகுள் பிக்சல் 8 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.75,999ஆக இருக்கிறது. இப்போது ரூ.4000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.71,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.82,999ஆக இருக்கிறது. இப்போது ரூ.5000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.77,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 8ஏ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. இப்போது ரூ.3000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.49,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும், கூகுள் பிக்சல் 8ஏ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,999ஆக இருந்தது. இப்போது ரூ.3000 விலை குறைப்பில் வெறும் ரூ.56,999 பட்ஜெட்டில் வருகிறது.

செய்கைனா இதுதான்.. ரூ.19000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்டில் பிக்சல்!

இந்த விலை குறைப்புக்கு அடுத்தபடியாக பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடல்களுக்கு ரூ.10000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.87,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

அதேபோல கூகுள் பிக்சல் 8 போன்களுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போன்களை பிளிப்கார்ட் தளத்தில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.6000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, 128 மெமரி கொண்ட மாடலை ரூ.51,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எம்ஆர்பி விலைக்கும் பிளிப்கார்ட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் வேறுபாடுகள் இருக்கிறது.

இறுதியாக பிளிப்கார்ட் தளத்தில் கூகுள் பிக்சல் 8ஏ போன்களுக்கும் ரூ.10000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஆரம்ப மாடலை ரூ.42,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.49,999 பட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X