மிரளுது மார்கெட்.. கூகுள் பிக்சல் ஆன் தி வே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 4950mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ போனின் டிசைன் மற்றும் கலர் வேரியண்ட் குறித்த தகவல்கள் வெளியாகி ஸ்மார்ட்போன் மார்கெட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுவருகிறது. இந்த போனின் கசிந்த அம்சங்கள், வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் இதோ.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த பிக்சல் மாடல் 6.7 இன்ச் (2992 x 1344 பிக்சல்கள்) க்யூஎச்டிபிளஸ் (QHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது. இந்த கூகுள் போனில் சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்787 (Sony IMX787) சென்சார் கொண்ட 64 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 48 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 10.8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த ப்ரோ மாடல் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்ட 4,950mAh பேட்டரி கொண்டுள்ளது. இப்போது, லீக்கான தகவலின்படி, இந்த கூகுள் பிக்சல் போன் லிகோரைஸ் பிளாக் (Licorice Black), போர்ஸ்லைன் வைட் (Porcelain White) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய கலர்களில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இதேபோல கூகுள் பிக்சல் 8 போனின் அம்சங்களை தெரிந்துகொள்வோம்.
கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த மாடல் 6.17 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.
அந்த வகையில், சாம்சங் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் கொண்ட கூடிய 10.8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூகுள் 8 மாடலில் 12W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,485mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலில் பிளாக் (Black), யெல்லோ (Yellow) மற்றும் லைட் ப்ளூ (Light Blue) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன.
இந்த 2 மாடல்களும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பே, அந்த போன்களின் விலை மற்றும் அதிகாரப்பூர்வ அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








