நல்ல மாசம் பொறந்துருக்கு.. இந்த அக்டோபரில் அறிமுகமாகி.. மார்க்கெட்டை மிரட்ட போகும் 7 புதிய போன்கள்!
ஆப்பிளின் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமாகி விட்டது. ஆக இந்த 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்லா ஸ்மார்ட்போன்களுமே அறிமுகமாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றிலும் தவறு. உண்மை என்னவென்றால்.. இனிமேல் தான் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்க போகிறது!
ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிளுக்கும் அதன் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுக்கும்" ஆப்பு" வைப்பதை வழக்கமாக கொண்டுள்ள கூகுள் நிறுவனமும், சாம்சங் நிறுவனமும் இந்த ஆண்டும் கூட "அதையே தான்" செய்யவுள்ளன. அதாவது ஐபோன் 15 சீரீஸிக்கு போட்டியாக புதிய போன்களை களமிறக்க உள்ளன!

கூகுள் அதன் பிக்சல் 8 சீரீஸை அறிமுகம் செய்யவுள்ளது; சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்23 எஃப்இ மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இவைகள் மட்டுமல்ல, இந்த 2023 அக்டோபர் மாதத்தில்.. ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் மிரட்ட போகும் 7 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அப்படி என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆக உள்ளன? எந்தெந்த மாடல்கள் சரியாக எப்போது (அதாவது இந்த மாதத்தில் எந்தெந்த தேதியில்) அறிமுகமாகும்? அவைகளின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
கூகுள் பிக்சல் 8 சீரிஸ் (Google Pixel 8 Series): கூகுள் வருகிற அக்.4 ஆம் தேதியன்று அதன் லேட்டஸ்ட் பிக்சல் போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்கீழ் பிக்சல் 8 (Pixel 8) மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Pixel 8 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும்.
இவ்விரு போன்களுமே கூகுளின் சொந்த டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்சல் 8 சீரீஸில் புதிய ஏஐ-எனேபிள்டு மென்பொருள் திறன்களும் சேர்க்கப்படலாம். இதில் முகங்களை எடிட் செய்யும் திறன் மற்றும் வீடியோ பூஸ்ட் தொழில்நுட்பம் ஆகியவைகள் அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, பிக்சல் 8 மாடலானது $699 க்கும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.58,097 க்கும்), பிக்சல் 8 ப்ரோ மாடலானது $899 க்கும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.74,720 க்கும்) அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 23 எஃப்இ (Samsung Galaxy S23 FE): இதுவும் அக்.4 ஆம் தேதி அறிமுகமாகும். அம்சங்களை பொறுத்தவரை எக்ஸிநோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங், 6.5-இன்ச் 120Hz டிஸ்பிளே போன்றவைகளை கொண்டிருக்கலாம். இது ரூ.54,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ வி29 சீரீஸ்: இதுவும் அக்.4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இதன்கீழ் விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும். அம்சங்களை பொறுத்தவரை, வி29 சீரிஸில் கர்வ்டு டிஸ்பிளே, 2எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, வெண்ணிலா மாடல் ரூ.32,990 க்கும், ப்ரோ மாடல் ரூ.43,990 க்கும் அறிமுகமாகலாம்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன்: ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற அக்.7 ஆம் தேதியன்று சிவப்பு நிறத்திலான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) ஸ்மார்ட்போனை சோலார் ரெட் எடிஷன் (Solar Red Edition) என்கிற புதிய கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யவுள்ளது.
ரெட் கலரில் கடைசியாக அறிமுகமான ஒன்பிளஸ் மாடல் ஒன்பிளஸ் 7 (OnePlus 7) தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு ஒன்பிளஸ் 11ஆர் தான் ரெட் கலர் ஆப்ஷனை பெறுகிறது. பெரும்பாலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் 11ஆர் உடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 11ஆர் ரூ.39,999 முதல் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open): ஒன்பிளஸின் இந்த முதல் ஃபோல்டபிள் போன், ஒன்பிளஸ் 11ஆர் ரெட் கலர் ஆப்ஷனுடன் சேர்த்து அறிமுகமாகுமா என்று கேட்டால்.. நிச்சயம் ஆகாது. இருப்பினும் இது பெரும்பாலும் இந்த மாதமே அறிமுகமாகி விடும். ஏனென்றால் இது கடந்த ஆகஸ்ட்டே அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். அறியப்படாத காரணங்களால் தாமதமாகி விட்டது.
அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஓப்பன், ஒப்போவின் ஃபைண்ட் என்2 ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம். மேலும் இது பெரிஸ்கோப் ஜூம் லென்ஸை கொண்ட முதல் ஒன்பிளஸ் போனாகவும் இருக்கலாம். விலையை பொறுத்தவரை இது ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








